06-13-2005, 01:32 AM
<b>வேட்டுக்கு வேட்டு</b>!
இந்த வாரம் 'வேட்டுக்கு வேட்டு'!
அதிரடி பாட்டுப் போட்டி நிகழ்ச்சி யின் தொகுப்பாளராகத் தொடை தட்டி வருகிறார் பாரதிராஜா... அரங்கத்தில் பலத்த கரகோஷம்!
<img src='http://img186.echo.cx/img186/2931/parathirasa4zb.png' border='0' alt='user posted image'>
<b>பாரதிராஜா:</b> ''என் இனிய தமிழ் மக்களே... இந்தத் தேனி அல்லிநகரத்து பால்பாண்டி, வண்ணத்திரையில் பாரதிராஜாவாகி, இதோ இன்று சின்னத்திரைக்கும் சின்னச்சாமியாக வருகிறான். என்ன திரையாக இருந்தாலென்ன... என் திரை தமிழ்த்திரை! யெஸ்... ஐ எம் பிரவுட் ஆஃப் திஸ்! இதோ, வெள்ளாமையின் முதல் மரக்கா நெல்லாக இந்த 'வேட்டுக்கு வேட்டு' நிகழ்ச்சியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்!'' கைத்தட்டல் பின்னுகிறது.
<b>பாரதிராஜா:</b> ''நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் தனுஷ். கிராமத்து ராசா கஸ்தூரிராஜா பெற்றெடுத்த மம்முத ராசா. தம்பி தனுஷ், வாடா!'' என்றதும் மீண்டும் கைத்தட்டல். தொடர்ந்து...
<img src='http://img186.echo.cx/img186/3411/thanus9fq.png' border='0' alt='user posted image'>
''தனுஷக்கு எதிரான போட்டியாளர் சிம்பு. அவர் மம்முதராசா என்றால் இவர் மன்மதன். விஜய டி.ஆர். வீட்டுச் சிங்கக் குட்டியே, மேடைக்கு வா!'' என்றவர் தனுஷிடம் திரும்பி, ''ஓகே! ஆக்ஷன்... பாடு தமிழா!'' என்று கர்ஜிக்க, திகிலாகிற தனுஷ் சமாளித்தபடி, 'தேவதையைக் கண்டேன்... காதலில் விழுந்தேன்' பாடல் மெட்டில் ஆரம்பிக்கிறார்.
<b>தனுஷ்:</b> ''சினிமாவுக்கு வந்தேன்
மூணு ஹிட்டு கொடுத்தேன்
ஹாட்ரிக் ஃப்ளாப்
கொடுத்துவிட்டேன்
செல்வா அண்ணன் கூட்டணியில்
'புதுப்பேட்டை' பண்றேன்
மன்மதனை ஜெயித்திடுவேன்
உன் மூக்கோடு...''
<b>பாரதிராஜா (குறுக்கிட்டு):</b> ''அருமை... அருமை. மூ... இந்த எழுத்தில் மணி ஒலித்திருக்கிறது. சிம்பு, நீங்க மூனா வரிசையில் பாடலை ஆரம்பிக்க வேண்டும். மு மூ மொ மோ... ஏதாவது!'' என்றதும், 'காதல் வளர்த்தேன்' மெட்டில் சிம்புவிடமிருந்து சீறி வருகிறது பாடல்.
<img src='http://img186.echo.cx/img186/2914/simpu4if.png' border='0' alt='user posted image'>
<b>சிம்பு:</b> ''மோதல் வளர்த்தேன்
மோதல் வளர்த்தேன்
உன் மேல் சுள்ளான் உன் மேல்
நானும் மோதல் வளர்த்தேன்
'தம்'ம போட்டு 'அலை'ஞ்சப்போ
கும்மாங்'குத்து' வாங்கியிருந்தேன்
இன்னிக்குத்தான் வல்லவனா
நானும் மாறியிருக்கேன்
ஏய் சுள்ளான் சுள்ளான்
உன்னை ஜெயிப்பேன்
நயன்தாரா உதட்டை நானும்
கடிப்பேன்... ஏய் சுள்ளான்...''
<b>பாரதி:</b> ''அய்யய்யே... பயமுறுத்தறானுங்களே! மணி சு என்ற எழுத்தில் ஒலித்திருக்கிறது. தனுஷ் சு வரிசையில் பாடலாம்!''
'துண்டக் காணோம்' பாடல் மெட்டில் அதிரடியாக வருகிறது அடுத்த பாடல்.
<b>தனுஷ்:</b> ''சிம்பக் காணோம் கம்பக்
காணோம்
புதுப்பேட்ட பண்ணப் போறோம்
என்ன செய்வே நீதான் என்ன செய்வே
அண்ணந் தம்பி சேரப்போறோம்
அடுத்த ஹிட்டு கொடுக்கப் போறோம்
என்னம்மா செய்வே
நீதான் என்னம்மா செய்வே..''
<b>பாரதி:</b> ''மணி 'மா'வில் ஒலித்திருக்கிறது. லிட்டில் சூப்பர் ஸ்டாரே, பாடுய்யா!''
<b>சிம்பு:</b> ''மன்மதன் ஹேஹே மன்மதன்
சொத்தை சொத்தை சொத்தை
என் எதிரியெல்லாம் சொத்தை
ஜெயிக்கலைன்னா எழுதித்
தர்றேன் டாடியின் சொத்தை''
<b>பாரதி:</b> ''தை. மணி ஒலித்த எழுத்து தை. பாடு, தனுஷ் பாடு!''
தனுஷ் தடுமாறி நிற்க, நேரம் முடிந்துவிடுகிறது.
<b>பாரதி:</b> ''ஓ... வாட் எ பேத்தடிக் சிச்சுவேஷன்! உனக்கான நேரம் முடிந்துவிட்டது தனுஷ். நீ வீட்டுக்குக் கிளம்பு!'' என்றதும், தனுஷ் வெளியேறுகிறார். கூடவே 'ஊஊஊ' என ஜாலியாகக் கத்தியபடி சிம்புவும்!
<b>பாரதி:</b> ''ஏய் சிம்பு... நீ எதுக்கு வெளியில போற? உனக்கு ஆட்டம் இன்னும் முடியலை!''
<b>சிம்பு:</b> ''என்னைப் பொறுத்தவரை முடிஞ்சிடுச்சு போட்டி! அடுத்த ஆட்டத்துல பார்ப்போம், இன்னொரு வாட்டி! ஜெயிக்கறது புதுப்பேட்டையா, வல்லவன் கோட்டையா... ஊஊஊ''என்றபடி சிம்பு வெளியேறிவிடுகிறார்.
<b>பாரதி:</b> ''வெளங்க மாட்டானுங்க..! 'போட்டியில அலையற ஹீரோ பொசுங்கிருவான், ஓட்டுக்கு அலையற ஹீரோ ஒழிஞ்சிடுவான்'னு அடுத்த பேட்டிக்கு தலைப்பு கொடுத்துற வேண்டியதுதான். ஓகே, லீவ் இட்! நாம அடுத்த போட்டியாளர்களை அழைப்போம். இதோ விருது நாயகன் விக்ரம், விறுவிறு நாயகன் சூர்யா... கமான், கமான்!'' என்றதும், விக்ரமும் சூர்யாவும் மேடைக்கு வர, விசில் பறக்கிறது.
<b>பாரதி:</b> ''உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. விக்ரம், உனக்கு விருப்பமான பாடலைப் பாடு!''
<b>விக்ரம்:</b> ''அந்நியன் சாங்ஸெல்லாம் கேட்டீங்களா? இட்ஸ் நைஸ் யு நோ! அதிலே வர்ற 'அண்டங்காக்கா கொண்டக்காரி' மெட்டுல ஒரு பாட்டு பாடறேன்...
''நேஷனல் விருது வின்னர்காரன்
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
முப்பது கெட்டப் மூஞ்சிக்காரன்
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
'மஜா' பண்ணும் சித்தன் நான்தான்
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
அருவா மீச ஆளு நான்தான்...''
<b>பாரதி:</b> ''மணி ஒலித்த எழுத்து அ குறில். அடிச்சுத் தூக்கு சூர்யா!'' என்றதும், 'அம்புலிமாமா... அம்புலிமாமா' பாடல் மெட்டில்...
<b>சூர்யா:</b> ''அந்நியன் மாமா அந்நியன் மாமா
சேலஞ்ச் உனக்கு நான்தானே
கஜினியாகிப் படையெடுத்தே
ரேஸில் முந்த வருவேனே... ஏய்... அழகி!''
<b>பாரதி:</b> ''அடி பின்றானுங்களே! யப்பா, மணி இப்ப 'ஏ'ல ஒலிச்சிருக்கு. ஏல ஏதாவது பாடுங்கடே!''
ஜில்லென்று பிதாமகனின் 'எளங்காத்து வீசுதே' பாடல் மெட்டில் இதோ...
<b>விக்ரம்:</b> ''எளங்காத்து வீசுதே
கிசுகிசுவும் பரவுதே
வளையாத மூங்கிலில்
வதந்தி வளைஞ்சு ஓடுதே
ஊரும் முழிச்சுக் கேக்குதே...''
<b>பாரதி:</b> ''அடடா! குத்து குத்துனு குத்துறீங்களேப்பா! கே வரிசையில் மணி ஒலித்திருக்கிறது. இது சூர்யாவின் முறை!'' என்றதும் 'மாயாவி' பட 'காத்தாடி போல' பாடல் மெட்டில்...
<b>சூர்யா:</b> ''காத்தாடி போல ஏன் ரீலு சுத்தறே
கண்டகண்ட நியூஸ் கேட்டு கடுப்பேத்தறே
நட்புன்னு சொன்னா
நீயும் நம்ப மாட்டறே
லக்கலக்க பாத்தும்கூட
திருந்த மாட்டறே...''
<b>பாரதி:</b> ''அப்படியே ம, மா, மி, மீ, மு, மூனா வரிசையில் இழுத்துப் பிடிச்சு நீ போட்டுத் தாக்குய்யா விக்ரம்!''
சாமி பட பாடலின் மெட்டில் சாமியாடுகிறார்
<b>விக்ரம்:</b> ''மொட்ட போட்டா சீயான்டா
பீடா போட்டா
ஜெமினிடா
பாதி கமல் பாதி ரஜினி
நானுடா
தொப்பி போட்டா
சாமிடா
குடுமி வெச்சா அந்நியன்டா...''
<b>பாரதி:</b> ''மணி ஒலித்த இடம் டாவன்னா! சூர்யா, இட்ஸ் ஸோ டிஃபிகல்ட்!''
<b>சூர்யா:</b> ''டாவன்னாவா?'' என யோசிக்க, அவருக்கான நேரம் முடிந்து விடுகிறது. சூர்யா சோகமாக வெளியேற, அதைப் பார்த்து குஷியாகி,
<b>விக்ரம்:</b> ''ஏய்... டாவுல 'டாடி டாடி ஓ மை டாடி'னு ஒரு பாட்டு இருக்கு, நைஸ் யு நோ! இதுகூடத் தெரியலை, ஹைய்யோ ஹைய்யோ!'' இதைக் கேட்டு கடுப்பாகி,
<b>பாரதி:</b> ''அதை நீ சொல்லக் கூடாது. ஏன் எல்லா ஹீரோக்களும் சொன்ன பேச்சைக் கேட்காம முந்திரிக்கொட்டை மாதிரி டார்ச்சர் பண்றீங்க. நீ பண்ணினது விதிமுறை மீறல். நீயும் அப்படியே கிளம்பு!'' என்று விக்ரமை வெளியேற்றுகிறார்.
<b>பாரதி:</b> ''இப்போது செம சூடான போட்டியாளர்களை அழைக்கப் போகிறான் உங்கள் பாரதிராஜா. ஒன்று மலை... இன்னொன்று தலை. இதோ உங்கள் முன்பு விஜய், அஜீத்!'' என்றதும், 'உய்உய்உய்'என அரங்கம் களேபரமாகிறது.
<img src='http://img186.echo.cx/img186/3284/viaji1rj.jpg' border='0' alt='user posted image'>
<b>அஜீத் (வந்தவாக்கில்):</b> ''ஆஸ்பட்டுட்டேன். நாந்தான் மொதல்ல பாடுவேன். யாராவது தடுத்தா அட்ச்சிடுவேன், மறிச்சா மித்ச்சிடுவேன்!''
<b>பாரதி:</b> ''ஆத்தீ... தம்பி இருக்கிற வேகத்தைப் பார்த்தா பிராண்டி வெச்சிடுவான் போலிருக்கே. எதுக்கு வம்பு... யெஸ்! ஐ வில் காம்ப்ரமைஸ். (சத்தமாக) அஜீத், நீங்களே பாடுங்க!''
'அட்டகாசம்' படப் பாடல் மெட்டில் ஆவேசமாகிறார் அஜீத்.
<b>அஜீத்:</b> ''என்னப் பத்தி இந்த ஊருக்குள்ள கேளு
பஞ்ச்சில் பொளக்கறவன் அஜீத்துனு பேரு
தீபாவளி தல தீபாவளி... தீபாவளி
தல தீபாவளி!'' என அஜீத் ஆட, மேடையே குலுங்குகிறது.
<b>பாரதி:</b> ''மணி தீ என்ற எழுத்தில் ஒலித்திருக்கிறது. தீ நெடில் அல்லது தி குறில்...''
<b>விஜய்:</b> ''ண்ணா... இது அநியாயமா இருக்குங்ணா! கண்டவங்க பாடி முடிக்கிற இடத்துலயிருந்து நான் எதுக்குங்ணா ஆரம்பிக்கணும்?'' என்றபடி, 'திருப்பாச்சி' படப் பாடல் மெட்டில் இஷ்டத்துக்குப் பாட ஆரம்பிக்கிறார்.
''நீ எந்த ஊரு, உனக்கில்ல பேரு
தலைக்கெல்லாம் மவுசு இல்ல... இல்ல
இல்ல
நான்தானே ஸ்டாரு, போட்டேன்
டாப் கியரு
பண்ணாத பஞ்ச் டயலாக் தொல்லை...''
<b>பாரதி:</b> ''மணி இப்போது...'' என பாரதிராஜா ஆரம்பிப்பதற்குள், ஆவேசமாகக் குறுக்கிட்டு 'ஜி' படப் பாடலைப் பாடுகிறார் அஜீத்.
''வம்ப வெலைக்கு வாங்கும்
நடிகன்டா
பேட்டி கொடுத்து உன்னைக்
கிழிப்பேன்டா
கார் ரேஸ§ இல்லடா உன் ரேஸ§
உண்டுடா...''
<b>பாரதி:</b> ''டேய்! நான்தான் நடுவர்... என் இனிய தமிழ் மக்களே... திஸ் ஈஸ் பப்ளிக் பிளேஸ்'' என்றெல்லாம் ஏதேதோ சொல்ல, எதையும் கண்டுகொள்ளாமல் விஜய் 'மதுர' பாடலை அள்ளிக்கொட்ட, போட்டி தொடர்கிறது...
<b>விஜய்:</b> ''மச்சான் பேரு தளபதி
நின்னா உனக்குத் தலைவலி
நான் றெக்க கட்டி
தியேட்டரெல்லாம்
காசு அள்ளும் கலெக்ஷன் புலி!''
எனப் பாட, அரங்கத்தில் கலவர முன்னோட்டம்.
<b>அஜீத்:</b> ''தலய எதிர்த்தா என்ன நடக்கும்?
மலைக்கெல்லாம் சீக்கிரம் மணியடிக்கும்''
என்று 'வில்லன்' படப் பாடல் மெட்டில் பாட ஆரம்பிக்கிறார்.
விஜய்யும் விடாமல், 'திருப்பாச்சி' படப் பாடல் மெட்டிலேயே,
''அப்ப கொடுத்த ஃப்ளாப்புல
ஆடுற நீ மப்புல
கைய நீட்டாதே
சொடுக்கி வசனம் பேசாதே'' என்று சூட்டைக் கிளப்ப...
<b>பாரதிராஜா:</b> ''வேட்டுக்கு வேட்டு நடத்த வந்தா, இவனுங்க ரெஸ்லிங் நடத்த ஆரம்பிச்சிடுவானுங்க போலிருக்கே! ஏ... யாருப்பா அங்கே?'' என்றதும் காவலாளிகள் வந்து, திமிறிக்கொண்டு ஆடும் விஜய்யையும் அஜீத்தையும் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போகிறார்கள்.
<b>பாரதி:</b> ''அப்பாடா... நம்மளை டென்ஷன் பண்ணிப் பார்க்கறதே இவனுங்களுக்கு வேலையா இருக்கு. ஓகே! இந்த நிகழ்ச்சியில் போட்டி போட்ட அத்தனை பேரும் தமிழ்த்திரை நடத்துகிற ஒரு நிகழ்ச்சியில் இலவசமாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள். திஸ் இஸ் எ ஃபென்டாஸ்டிக் கிஃப்ட்!'' எனப் பாரதிராஜா வலைவிரிக்க, அத்தனை ஸ்டார்களும் ஸ்டாப் பிளாக்கில் எஸ்கேப்!
vikatan