06-13-2005, 12:58 AM
வணக்கம் நண்பர்களே
எல்லா மதங்களும் மனிதரை நல்வழிப்படுத்தவே ஆரம்பிக்கப்பட்டன. மக்கள் தங்கள் விருப்பப்படி தமக்குப் பிடித்தமான மதங்களை பின்பற்றுகின்றார்கள். ஆண்டவன் இல்லையென கூறுவோர் கூட தமக்கு அப்பாற் பட்ட சக்தியொன்று தம்மை வழிநடாத்துகின்றதை ஒப்புக் கொள்கின்றார்கள். சமயங்கள் ஒன்றும் தவறான போதனைகளைக் கூறவில்லை. அதைப் பரப்புவோரும் வழி நடாத்துவோருமே சில தவறான வழிவகைகளை கைக்கொள்கின்றார்கள். அதற்கு காரணம் மக்களின் பலவீணங்கள் தான். இந்து சமயத்திலுள்ள பலமும் பலவீனமும் எவரும் சமயத்தை விமர்சிக்க கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம்தான். எங்கோ வாசித்த வக்கிரங்களை களத்தில் வைத்த நண்பருக்கு இந்துமதம் பல்லாயிரக்கணக்கான வருடங்குளுக்கு முன்பே கண்டுபிடித்த உண்மைகளை தற்போதைய விஞ்ஞானம் ஆராய்ச்சி மூலம் ஒப்புக்கொள்கின்றதே அப்படியான விடயங்கள் கண்ணில் படவில்லையா?? உதாரணமாக செவ்வாய்க்கிரகம் சிவப்பு நிறம். வக்கிரங்கள் என்பதை எவரும் நமக்கு வலிந்து புகுத்திவிட முடியாது. எமக்கும் அதில் விருப்பம் ஏற்படும்போதுதான் அதை விரும்பி ஏற்றுக் கொள்கின்றோம். நண்பரொருவர் ஆறுமுகநாவலரும் சாதிகளை நிலைநிறுத்தப் பாடுபட்டாரென எழுதியுள்ளார். பாவம் அவருக்கு ஆறுமுகநாவலரின் சரித்திரம் கூடத் தெரியவில்லை.
கடைக்குச் சாப்பிடச் செல்கின்றோம் பரிமாறிய சாப்பாட்டில் சிறு முடி இருக்கின்றது. ஆதனால் சாப்பாடு சரியில்லையென்றாகிவிடுமா அல்லது கடை முதலாளி அயோக்கியனாகி விடமுடியுமா? எமது நோக்கத்தில் உறுதியும் நேர்மையும் இருக்கும் வரை நாம் அடையும் இலக்கை எவையும் பாதித்துவிட முடியாது. ஓவ்வொரு விடயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருந்தேயாகும். நாம் எமக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோமே. உண்மையில் மனச்சாட்சியோடு கூறுங்கள் நாம் எத்தனை பேர் நாம் பின்பற்றும் மதங்களைப்பற்றி 100 வீதம் அல்லது சராசரியாக அறிந்து வைத்துள்ளோம். வெள்ளாடு மேய்ந்தது போல் கையளவு கற்றுவிட்டு அலட்டலோ உலகளவு. கண்ணதாசன் தன் புத்தகமொன்றில் எழுதியுள்ளார் : நீஙகள் ஒரு மனைவியுடன் வாழவிரும்புகின்றீர்களா இராமனை வணங்குங்கள். இரு மனைவிகளுடன் வாழ விரும்புகின்றீர்களா முருகனை வணங்குங்கள். பல மனைவிகளுடன் வாழ விரும்புகின்றீர்களா கண்ணனை வணங்குங்கள் அல்லது என்னை வணங்குங்களென்று அதனால் இதை இந்துமதம் கூறியதாக சொல்லமுடியுமா. முருகனுக்கு வள்ளி தெய்வானை என இரு மனைவிகளாகச் சித்தரித்திருப்பது இரு சக்திகளை. உண்மைகளை அறியாமல் மேலோட்டமாக அறிந்தவற்றை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துக் கூற முடியாது.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.