09-30-2003, 09:45 AM
<b>பள்ளிமுனையில் தேவாலயம் தகர்க்கப்பட்டதையடுத்து பதற்ற நிலையைத் தணிக்க கடும் முயற்சிகள்</b>
மன்னார் பள்ளிமுனை ஊசி மூக்கன் துறைப் பகுதியில் அமைந்திருந்த புனித அந்தோனியார் தேவாலயம் எருக்கலம்பிட்டிý பகுதியைச் சேர்ந்தவர்களினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு டைனமற் வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
எருக்கலம்பிட்டிý, பள்ளிமுனை பகுதியின் எல்லைப் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இப்பகுதி கத்தோலிக்க மக்களினால் அமைக்கப்பட்ட இத்தேவாலயத்தை அகற்றுமாறு எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
ஆரம்ப காலத்தில் கிடுகால் அமைக்கப்பட்டிýருந்த இத் தேவாலயம் இரு தடவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதையடுத்து, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்லால் கட்டப்பட்டது.
இந்தத் தேவாலய அமைப்புப் பணிகளுக்கு எருக்கலம்பிட்டிý பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தேவாலய கட்டிடம் டைனமற் வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை காலை கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் தேவாலயம் உடைக்கப்பட்டு இதன் பாகங்கள் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டுக் கொண்டிýருப்பதை தடுத்து நிறுத்த முற்பட்ட போது இரு சாராருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் ஒரு தமிழ் இளைஞனும், இரு முஸ்லிம் இளைஞரும் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து பள்ளிமுனை மக்கள் தேவாலயம் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் மன்னார் அரச அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றுக் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வீதி மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான கத்தோலிக்க மக்கள் ஈடுபட்டிýருந்தனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் விஸ்வலிங்கம், மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி.வண. இராயப்பு ஜோசப், பள்ளிமுனை பங்குத் தந்தை ஏ.ஞானப்பிரகாசம், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மிஸ்ஹின், விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் எஸ்.அருணோதயன் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அமைதியாகக் கலைந்து செல்லுமாறும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்காக நான்கு படகுகளில் மேற்படி குழுவினர் ஊசி மூக்கன் துறைப் பகுதிக்குச் சென்றனர்.
இங்கு விஜயம் மேற்கொண்ட உயர் மட்டக் குழுவினர் தேவாலயம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதையும், இதன் கட்டிýடப் பொருட்கள் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டிருப்பதையும் மற்றும் திருச்சொரூபங்கள் புதர்ப்பகுதிக்குள் தூக்கி வீசப்பட்டிýருப்பதையும் கண்டு கொண்டனர்.
இது ஒருபுறம் இருக்க, மன்னார் பகுதியில் ஏற்பட்ட பெரும் பதற்ற நிலையையடுத்து, நேற்று நண்பகலுடன் வர்த்தக நிலையங்களை மூýடுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.
கத்தோலிக்க மக்கள் மன்னார் பிரதான வீதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகனப் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன.
கத்தோலிக்கத் தேவாலயம் தகர்க்கப்பட்டதையடுத்து, மன்னார் மூýர் வீதி, உப்புக்குளம், பெரியகடை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த முஸ்லிம் பள்ளிவாசல்களைச் சுற்றி அதிகளவிலான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அதிகளவிலான கலகத்தடுப்புப் பொலிஸாரும், கடற்படையினரும் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேவாலய உடைப்புச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பள்ளிமுனை மீனவர்களினால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தணிவிற்குக் கொண்டு வருவதற்காக வன்னிப் புனர்வாழ்வு அமைச்சர் நூர்தீன் மர்சுர் விசேட ஹெலிகொப்டர் மூýலம் நேற்று மாலை மன்னாருக்குச் சென்றுள்ளார்.
மேலும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு பதற்றத்தைத் தணிவிற்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி தினக்குரல் பத்திரிகை