06-12-2005, 07:06 PM
viyasan Wrote:மியாவ் சீ பூனைக்குட்டியாரே நீங்கள் என்னை தப்பாக நினைக்கின்றீர்கள். நான் ஒரு மதவெறியனல்ல. ஆனால் அதை முழுதாக நம்புகிறவனுமல்ல. ஆனால் நீங்கள் கேட்ட சிலவற்றுக்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. மதத்தை நம்புகின்றவர்களை நான் நோகடிக்கவும் விரும்புவதில்லை.
முதலாவதாக நீங்கள் கேட்ட கேள்வி நிறைய கடவுள்கள் ஏன்?
அதுக்கு நீங்கள் கொஞ்சம் பதிலும் சொல்லியிருக்கின்றீர்கள் கிறிஸ்துவ மதம் ;யேசுவிலிருந்து உருவானது. ஆனால் நீங்கள் தேவாலயம் சென்றிருந்தால் பார்த்திருப்பீர்கள் அங்கேயும் கன்னிமரியாள் யேசுவினது இன்னும் பல சிலைகள் இருக்கும். மற்றது யேசுவினால் உருவான மதத்திலேயே எத்தனை பிரிவுகள் இருக்கின்றது?
அதன் காரணம் என்னவாக இருக்கலாம் பூனைக்குட்டியாரோ?
மனிதன் என்றும் ஒன்றில் திருப்தி அடைபவன் அல்ல. புதுப்புது ஆசைகள் அவனுக்கு உருவாகின்றது. அவர்களையும் திருப்தி அடைய வைக்கவேண்டி இருக்கின்றது.
பூனையாரே உங்களுக்கு பசி எப்போதும் ஒரேமாதிரித்தானே இருக்கின்றது. அளவில் வித்தியாசப்படலாம் மற்றும்படி பசி ஒரே மாதிரித்தான். ஆனால் நீங்கள்(நாங்கள்)ஏன் விதவிதமாக சமைத்து சாப்பிடுகின்றீர்கள்? பசி எப்போதும் ஒரோமாதிரி இருக்கின்றது சாப்பாடும் ஒரே மாதிரி இருக்கலாம்தானே வீணாக ஏன் சிரமப்பட்டு வித்தியாசம் வித்தியாசமாக சமைக்க வேணும். அலுப்பு தட்டிவிடும் என்றுதானே? ஒரே கடவுளாக இருந்தால் சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் வித்தியாசம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்தால் ஏதோ ஒன்று ஒருவருக்கு பிடிக்கும் அதற்காகத்தான் என்று நினைக்கின்றேன்.
கடவுளையும் எங்களைப்போல உருவாக்கியிருந்தால் அதைப்பார்த்து ஒருவரும் பயப்பட மாட்டார்கள். அதனால்தான் மனிதர்கள் கடவுள்களை வித்தியாசமாக உருவாக்கியிருக்ககூடும். மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர மதம் உதவியிருக்கின்றது. சாமி தண்டனை தரும் என்ற பயம் மக்களை குற்றம் செய்யவிடாமல் வைத்திருக்கின்றது? மனிதன் தன்னிலிருந்து கடவுளை வேறுபடுத்த கடவுளுக்கு தும்பிக்கை அப்பிடி இப்பிடி பல உருங்களை உருவாக்கியிருக்கின்றான் என்பது எனது கருத்து நீங்கள் கடவுளை முழுமையாக நம்புகின்றவர்களை கேட்டால் அவர்கள் வேறு காரணம் சொல்வார்கள்.
ஒன்று மட்டும் தெரிகிறது மியாவ் அடுத்து இன்னொரு பெயரில் வந்து கடித்து குதற காத்திருக்கின்றீர்கள் . இதற்கு அஞ்சினால் நான் களத்துக்கு வந்திருக்கமாட்டன். உங்கள் கேள்வியை பார்த்தால் தெரியாமல் கேட்கின்ற மாதிரி இல்லை வில்லங்கமாக கேட்கின்றது தெரிகிறது.
என்னைப் பொறுத்த வரையில் மதம் மக்களை நல்ல வழியில் கொண்டு செல்தற்காக உருவாக்கப்பட்டது. அதில் எந்த மதத்தில் நல்ல கருத்துக்கள் இருக்கின்றது என்பதைத்தான் கொண்டு எந்த மதம் சிறந்தது என்று பார்க்கமுடியும். மதம் ஒன்று உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம். பெரும்பாலானோர் மறுபிறவியில் தண்டனை கிடைக்குமென்ற பயத்தில்தான் அநியாயங்களை செய்ய பயந்தனர்
நன்றியண்ணா. கடவுள மனுசனே உருவாக்கினது. நீங்களேன் அப்பிடி சொல்றீங்கள்? மனுசன் பயப்பிடுறதுக்குத்தான் மனுசனே கடவள உருவாக்கினதெண்டு மனுசனுக்கு தெரியேக்க பிறகெதுக்கு அந்த கடவுள கும்பிடுகினமண்ணா? இப்ப நீங்கள் சொல்றீங்கள் தானே மனுசர் குற்றம் செய்யாமல் வச்சிருக்க கடவுள வித்தியாசமா பயங்கரமா செய்து வச்சிருக்கினம் மனுசரெண்டு அப்ப உங்களுக்கு இது தெரிஞஇச படியால் நீங்கள் தப்பு செய்யலாந்தானே? ஏன் அப்ப நீங்கள் செய்யலண்ணா? கடவுள் பயத்தால செய்யலயா அல்லாட்டி எதால நீங்கள் செய்யலண்ணா? எல்லா மதமும் மனுசருக்கு நல்ல கருத்த சொல்றதுக்கு தானெண்டால் பிறகெதுக்கு அந்த மதம் நல்ல மதம் இந்த மதத்தில கூடாது நிறைய இரக்கெண்ட சொல்லுறது? கிறிஸ்தவ மதத்திலயும் நிறைய கடவுள் இருக்கே அப்ப இஸ்லாத்திலயும் இருக்காண்ணா?

