06-12-2005, 05:25 PM
மதன்! இதோ கேளுங்கள்
நீப்பாசன இலாகாவில் வேலை. 1990 ல் 48 வயதில் இளைப்பாறுதல்.!
வடமராட்சி வீட்ட்டில் வாசம். சகோதரர்களுடன் இரும்புக்கடை.!
பொருளாதார தடை. இரும்புச்சாமான்கள் தட்டுப்பாடு.
கடைமூடு. சனசமூக நிலையத்தில் தலைவர் பதவி!
நூல்கள் இரவல் கொடுத்தல். கைபட்டுபட்டு சிதைந்து கிழிந்து வருதல்.
புதியன வாங்க பணத்தட்டுப்பாடு. புதிய அட்டை கட்ட ஆர்வம்.
இதற்கென பருத்தித்துறை குமார் அச்சகத்தில் எனக்கு பயிற்சி.
நூல்களுக்கு அட்டை போட்டு செலோ ரேப் ஒட்டுவதில் திருப்தி.
ஷெல் விழுதல். கதவு ஜன்னல் பறத்தல். நிலையதிற்கு உயிர் போதல்.
மரம் நடுகையில் ஆர்வம். வேம்பு ஆல் அரசு புரட்டடி வீதியோரங்களில் நடுதல்
இப்போது அவை தெரு ஓரங்களில் விருட்சம்; ஊரில் எனது பெயரில்.
கைவண்டிலில் பனங்கொட்டை,ஆஸ்பத்திரி வளவில் நடுகை நானும் நண்பனும்.
இராணுவம்! இளைஞர்கள் கைது. பெற்றோர் முகாம் படை எடுப்பு.
இருவருகிடையில் சிங்களத்தில் மொழிபெயர்க்க எனக்கு அழைப்பு.
சமாதான நீதிவான் பதவியொன்று வலிந்து வந்தது.
அன்பளித்தவர் கேணல் ஒருவர் என்பதால் ஏற்க மறுத்தேன்
பேராதனையில் கற்ற மகளை உலகின் இரண்டாம் பெரிய நாட்டுக்கு அனுப்ப
கொழும்பு விரைவு. இது 1998 ல். விசாவிற்கு விண்ணப்பம். கொழும்பில் செலவு அதிகம்.
எனவே திருமலையில் கஸ்டம்ஸ் தெருவில் அறை எடுத்து காத்திருப்பு.
கோணேசரை பார்த்த வாசகசாலையில் பகலில் தஞ்சம். அயலில் கம்பியூட்டர் நிலையம்.
அங்கே கற்க ஆசை. எக்ஸல் 97 ஐ கரைத்து குடித்தேன். போதாக்குறைக்கு திருமலை
பெரிய வாசகசாலை கம்பியூட்டர் நூல்கள் எனக்கு உதவி.
விசா கிடைத்து. மகள் பறந்து போனாள். நான் மிதந்து ஊர் திரும்பினேன்
மகன் ஒருவன் இந்தியாவில். தங்கை அழைக்க அவனும் பறந்து போய் ஒன்றினைந்தான்.
நானும் துணையும் சொந்த வீட்டில். பிள்ளைகள் உடனில்லை. கலகலப்பு மறைந்தது.
இரண்டாண்டுகள்! காலையில் வீடு மாலையில் தெருவோர குந்தில் அரட்டை.
பொழுது வீண் போனது. சுற்றாடலில் மக்கள் பத்துவீதம் மாத்திரம்.
வன்னி இடம் பெயர்வால் உறவுகளின் வெற்று வீடுகளை காக்கும் பொறுப்பும் என்மேல்.
ஸ்பொன்சர் அழைப்பு வந்த்து 2000 த்தில். ஆடம்பர பொருட்களை விற்றோம்.
வீட்டை தம்பியிடம் கையளித்தோம். மிதந்து திருமலை வந்து ஊர்ந்து வவுனியா வந்தோம்.
உறவினர் விடுதியில் காத்திருப்பு. வவுனியாவில் கம்பியூட்டர் நிலயங்கள் அதிகம்.
விட்டதை மீண்டும் தொட்டுக்கொள்ள ஆசை வந்தது. இம்முறை ஹாட்வெயர் படிக்க.
முறையான ஹாட்வெயர் கல்வி அப்போது வவுனியாவில் இல்லை.
நிலையமொன்றில் ஹாட்வெயர் ஆரம்பம்: 500 கட்டி அதில் சேர்ந்தேன்.
தொடரும்......