06-12-2005, 04:30 PM
Mathan Wrote:vennila Wrote:kuruvikal Wrote:[quote=vennila]வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா?
(ஆண் பெண்) <b>நண்பர்கள்</b> காதலித்தால் தப்பா? :?:
தங்கையே... அன்பும் காதலும் வாழ்க்கையும் உங்களுடையது... அங்கு ஒரு மனிதனிக்குப் பூரண சுதந்திரம் இருக்கு...அங்கு தப்பென்று உங்களுக்குப் பட்டதைச் செய்யாதீர்கள்... தப்பா என்று சபையில் கேட்காதீர்கள்...அதன் மூலம் நீங்கள் தப்புப் பண்ணுகிறீர்கள்... உங்களுக்குள் உள்ளதை இட்டு அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம்...அதை மற்றவன் தனக்கு சார்பாக்கித்தான் பதில் சொல்வான்...அது உங்களுக்கு அவசியமா..??! இல்லவே இல்லை...! அதேவேளை...மற்றவர்கள் இவற்றை மதிக்க அவர்களை மதித்து நடந்துகொள்ளுங்கள்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இல்லை குருவியண்ணா நான் பொதுவாகத்தான் கேட்டேன். நண்பர்கள் காதலித்தால் தப்பா என்று?
நான் நண்பர்களை நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் சிலர் சொல்வார்கள் நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறலாம் அப்படின்னு. அதுதான் கேட்டேனே தவிர, என் வாழ்க்கையில் நான் தான் முடிவெடுக்கணும். அதற்கு சுதந்திரம் அதிகமாகவே இருக்கு. என் வழ்க்கைக்குரியதை நான் சபையில் கேக்கவில்லை. நான் பொதுவாக கேட்க நினைத்தேன். :wink:
நண்பர்கள் காதலர்களாக மாறுவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நண்பர்கள் காதலர்களாக மாறும் போது ஒருவரை ஒருவரை நன்றாக புரிந்திருப்பதாகவும் புரிந்துணர்வு அதிகம் என்பதால் எதிர்கால வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்றும் சிலர் சொல்வார்கள். இதுபோன்ற ஒரு காதலை பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் பார்த்தேன். இதில் முக்கியமான ஒன்று நண்பர்களில் ஒருவர் மட்டும் காதலராக மாறி அதனை மற்றவரினால் அதனை ஏற்று கொள்ள முடியாத போது நட்பிலேயே விரிசல் ஏற்படும். காதலாக இல்லாமல் நட்பாக பழகிய மற்றவர் என்ன இப்படி நினைத்துவிட்டாரே என்று மனம் வருந்த கூடும். இது நட்பு இல்லாமல் போக வழி செய்யலாம்
இல்லை மதன் அண்ணா இரு நண்பர்கள் (ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நண்பர்கள்) தாங்கள் காதலர்களாக மாறலாமா அப்படி மாறுவதால் தங்களின் எதிர்காலம் எப்படி அமையும் .........இவ்வாறு பலவற்றை கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் தானே. புரிந்துகொண்ட நண்பர்களுக்குள் இப்படி கலந்தாலோசிப்பதால் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை தானே. :?: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


