06-12-2005, 10:56 AM
kirubans Wrote:kuruvikal Wrote:இவர்கள் புலி எதிர்ப்பில்ல...தமிழீழ எதிர்ப்பு... தமிழர் எதிர்ப்பு... தமிழ் எதிர்ப்பு எல்லாம் பேசுவார்கள்..காரணம் மேற்குலகில் சொகுசாக இருக்கிறார்கள் எல்லா...! இவர்கள் இதென்ன இன்னும் பேசுவார்கள்... பிரபாகரனுக்கு மாற்றுத் தலைவராக டக்கிளசை பிரேரிப்பார்கள்..மாற்றுத் தளபதியாக கருணாவை நிறுத்துவார்கள்...மாற்று அரசியல் பொறுப்பாளராக ஆனந்த சங்கரியைப் போடுவார்கள்...புலனாய்வுத் தலைவராக தானே தன்னை உருவகிப்பார்கள்...வாயால் சுனாமியால் உயிர் இழந்தவர்களைக் கூட உயிர்ப்பிப்பார்கள்...உலக வங்கிக் கடனில்லாமலே சுனாமி அழிவை கடலைக் கொண்டே கட்டிவிப்பார்கள்..யார் இவர்கள்..அவர்களின் பலம் என்ன... சேகுவராவின் முகத்தைப் போட்டு சொந்தப் பெயரும் சுயரூபமும் என்பவர்களாச்சே... இந்திய உளவுப் பிரிவுக்கு அவசியமான ஒன்று பலமான புலிகளுக்குள் பிளவும்...மாற்றுத் தலைமையும்...(இதன் மூலம் தமிழ் மக்களைப் பிளவுபடுத்திப் பலவீனமாக்கலும் எதிர்பார்க்கப்படுகிறது..!) அதன் அடிப்படையில் யாழ் களத்திலும் கருத்துக்கள் விதைக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை....இது ஒன்றும் அவர்கள் நினைப்பது போல சாதுரியமான செயலும் அல்ல...! இது தமிழர்கள் எமக்குப் பழகிய ஒன்றுதான்...! புலிகள் தோன்றியது முதல் தமிழ் மக்கள் மாற்றுக் கருத்துக்களையும் குழுக்களையும் கண்டுதானே வந்திருக்கிறார்கள்...இடைநடுவில் முளைத்த நாமே பலதைச் தரிசித்துவிட்டோம்...அதில் பலதையும் உருவாக்கியது இந்திய புலனாய்வாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும்...!
19,000 போராளிகளினதும் 80 ஆயிரம் பொதுமக்களினதும் உயிர்த் தியாகங்கள் பற்றியும்.. பல இலட்சம் மக்களினதும் துன்பியலைப் பற்றியும் இவர்கள் உணரக் கூடிய நிலையில இல்லை என்பதை பல கோடிப் பேர் பின்பற்றும் ஒரு மதத்தை அதன் அடிப்படையை படித்தும் விளங்கிக் கொள்ளாமல் வக்கிரத்துக்கு விலை போனபோதே தெரிந்து கொண்டாயிற்று,,,குறைந்தது அந்த மக்களின் நம்பிக்கைக்கு ஒரு சின்ன மரியாதை கூட கொடுக்க முடியாத வக்கிர சிந்தனையாளர்கள்...இப்படியும் பேசக் கூடியவர்கள் எப்படியும் வாழக் கூடியவர்கள்...இவர்கள் மனித சமூகத்துக்குள் வாழும் மனிதம் தொலைத்த....மனிதரல்லா விதி விலக்குகள்...இவர்களைப் பற்றிக் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் காட்டிக் கொண்டிருப்பது ஒருவகையில் வரவேற்கத்தக்க ஒன்றுதான்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தரப்பட்ட கேள்விக்களுக்கு நியாயமான விடைகளை புலியெதிர்ப்பு அரசியல் செய்பவர்களால் தரமுடியாது என்பதற்காகவே இங்கு இணைக்கப்பட்டது. இது மயக்கத்திலிருப்பவர்களை சற்று சிந்திக்கச் செய்யும்.
நான் எழுதிய வேறு கருத்துக்கள் உமக்குப் பிடிக்காத ஒரே கரணத்தால்தான் நீர் இப்படியான பதிலை எழுதியுள்ளீர் என்று தெரிகின்றது.
ஒருவரின் கருத்தில் உள்ள கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்க முற்படாமல், சும்மா பூச்சாண்டி காட்டவேண்டாம். என்னைபற்றி உமது கற்பனைகளுக்கு பதில் அளிக்க எனக்கு அவசியமில்லை. (எங்கோ தனிப்பட்ட ரீதியில் ஒருவரைத் தாக்கக் கூடாது என்று எழுதியுள்ளீரே, எழுதியதை நீர் கடைபிடித்தால் என்ன)
லண்டனில் இருந்தால் என்னுடன் நேரிலேயே உமது கருத்துக்களை வைக்க சந்தர்ப்பம் உள்ளது. அப்போது சொந்தப் பெயர் என்ன சுயரூபம் என்னவென்று நீர் புரிந்து கொள்வீர். விரும்பினால் தனிமடலில் எங்கு சந்திக்க விருப்பம் என்று சொல்லுங்கள். முகமூடிக்குள் இருந்து கொண்டு எதையும் எழுந்தமானத்தில் எழுதிவிட்டுப் போக நான் ஒன்றும் பேடியல்ல.
கிருபன் இங்கு சிலர் தமது பிற்போக்கான கருத்தோட்டங்கள் அம்பலப்படுத்தப்படும் தருணங்களில் ,தங்களை தீவிர புலி ஆதரவாளர் போன்ற மாயையய் உருவாக்கி ,பூன்ச்சாண்டி காட்டுகின்றனர்.இப் பூச்சாண்டி புலிகளை அறியாதாரிடம் பலிக்கலாம், அறிந்தவரிடம் அல்ல.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 