06-12-2005, 04:36 AM
ஜீனியர் விகடனில் இது பற்றி வந்துள்ள கட்டுரை 8)
<b>கனடாவுக்குள் கால்வைத்தால்..? </b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b>புலி முழக்கம்...</b> :roll:
விடுதலைப் புலிகளால் உங்களுக்கு ஆபத்து என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய எச்சரிக்கை கடிதம் கிளப்பிய பரபரப்பே ஆறவில்லை. அதற்குள் கடல் கடந்து வேறு ஒரு ரூபத்தில் வந்திருக்கும் மிரட்டலால் மீண்டும் தமிழகத்தில் புலிப் பேச்சு, பீதி கிளப்பத் தொடங்கி விட்டது.
கனடாவின் டொரன்டோ நகரில் வெளியாகும் தங்க தீபம் என்ற தமிழ்ப் பத்திரிகை, ஜூன் 18&ம் தேதி நடத்தவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் எஸ்.வி.சேகர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தநிலையில், மற்றொரு தமிழ்ப் பத்திரிகையான முழக்கம், எஸ்.வி.சேகரின் வருகை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. கூடவே, Ôவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, எல்.டி.டி.ஈ க்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, பத்திரிகையாளர் சோ, நடிகர் எஸ்.வி.சேகர் போன்றோரை கனடாவில் தமிழர் வாழும் பகுதிகளில் எந்த நிகழ்ச்சிக்காகவும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்கிற ரீதியில் ஒரு எச்சரிக்கை செய்தியையும் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த திடீர் எச்சரிக்கை விவகாரம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகரைச் சந்தித்துக் கேட்டோம்.
யெஸ்... கனடா ட்ரிப்பை நான் கேன்சல் செய்து விட்டேன். இதற்கு முன்பும், இதுபோல் எனக்கு விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து மிரட்டல் வந்திருக்கிறது. அப்போதும் திட்டமிட்டபடி என்னுடைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததில்லை. ஆனால், இப்போது நான் அ.தி.மு.க. என்ற மிகப் பெரிய கட்சியில் இருக்கிறேன். விடுதலைப் புலிகளின் வன்முறைகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகிறார் எங்கள் தலைவி. அவரின் தைரியத்தைப் பற்றி தமிழக மேடைகளில் நான் முழங்கி வருகிறேன். இதனால், விடுதலைப்புலிகளுக்கு எங்கள் மீது கோபம் இருக்கிறது. எனவேதான் இந்த மிரட்டலை சீரியஸாகப் பார்க்கிறேன்.
<b>தங்க தீபம் பத்திரிகையை கந்தய்யா சிவனேஸ்வரன் என்பவர் நடத்தி வருகிறார். இவர், இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனேவின் உதவியாளர் களில் ஒருவர். அவருடைய அழைப்பின் பேரில்தான் கனடா செல்லத் திட்டமிட்டிருந்தேன்.</b>
ராஜீவ் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது என்று ராஜீவ் கொலை வழக்கின் தீர்ப்பு வந்த சமயத்தில் நான் தெரிவித்திருந்த கருத்தையும் சுட்டிக்காட்டி, முழக்கம் பத்திரிகை எச்சரித்திருப்பதாக கந்தய்யா என்னிடம் போனில் சொன்னார்.
என்னுடைய கனடா பயணம்... கேன்சலான விவரம் மற்றும் காரணங்களை விவரமாக எனது கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கிறேன் என்று சொல்லி முடித்தார் எஸ்.வி.சேகர்.
முழக்கம் பத்திரிகையில் வெளியாகியிருப்பதாகச் சொல்லப்படும் மிரட்டல் குறித்து சோ, சுப்பிரமணியம் சுவாமி ஆகியோரிடம் கேட்டோம். அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார்கள்.
தமிழக உளவுத் துறை வட்டாரத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரித்தோம். கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழத்தின் மீது ரொம்பவே ஈடுபாடு உண்டு. எண்பதுகளில் இலங்கையில் தலை விரித்தாடிய வன்முறைகளின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய தமிழர்கள், அகதிகளாக கனடாவில் தஞ்சம் புகுந்தனர். அந்த அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியது. அவர்கள் அங்கு தொழில் துவங்கவும் அனுமதி அளித்தது. சுமார் 20 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் இன்றைய எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சத்தைத் தாண்டும்.
புலிகளுக்கு நிதியுதவி செய்யும் அளவுக்கு பொருளாதாரத்தில் நன்றாகவே முன்னேறியிருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள், கொள்கைகளைப் பரப்புவதற்காகவே உலகத் தமிழர், ஈழ முரசு ஆகிய இரண்டு செய்தித்தாள்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போது புதிதாக, முழக்கம் என்ற பத்திரிகையும் புலிகளுக்கு ஆதரவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் துவங்கியிருக்கிறது. இந்தப் பத்திரிகையில் வந்த எச்சரிக்கை, உண்மையிலேயே புலிகளிடமிருந்து விடுக்கப்பட்டதா அல்லது புலிகளுக்குத் தங்கள் ஆதரவு நிலையைக் காட்டிக் கொள்ள அந்தப் பத்திரிகையே இப்படி ஒரு செய்தியை வெளியிட்டதா என்பதை ஆராய்ந்தால் எல்லாவற்றுக் கும் விடை கிடைத்துவிடும். அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோம் என்றார்கள்.
<b>கனடாவுக்குள் கால்வைத்தால்..? </b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <b>புலி முழக்கம்...</b> :roll: