Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலியெதிர்ப்பு அரசியல்
#26
ஊமையவர்களே சற்று தப்பாக எனது கருத்தை விளங்கியிருக்கிறீங்கள் போலுள்ளது. மீண்டும் முயற்சிக்கிறேன்.

இந்த விவாத தலைப்பு புலிகள் மீது விசமப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததாக நான் எண்ணவில்லை அதைத்தான் கூற முனைந்தேன். புலிகளின் தியாகம் கட்டுப்பாடுää வீரம் கொள்கைப்பற்றுறுதி போன்றவற் விளங்கியவர்கள் உணர்ந்தவர்களிற்கு நீங்கள் சொல்லாமலேயே புலிகளை விமர்சிக்கவோ தமிழ்தேசியத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்ளையோ கூற மாட்டார்கள்.
புலியெதிர்ப்பு அரசியலில் ஏமாற்றுப்படக்கூடியவர்கள் உங்களை மாதிரி அங்கிருந்து அழிவுகளை நேரில் கண்டு அனுபவித்து உறவுகளை இழந்து உண்மைநிலையை உணர்ந்தவர்கள் அல்ல. ஆனால் இந்த அவலங்களில் ஒரு சிறுபகுதியை தன்னும் அனுபவிக்காது புலத்தில் வழர்ந்துவருவோரின் பார்வை வித்தியாசமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் நேரில் அனுபவிக்காத ஒன்றை சரியாக பலத்த பிரச்சாரயுத்திகளின் மத்தியில் விளங்கிக்கொள்ளுவது கடினமென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
புலத்தில் இருக்கும் எதிர்கால சந்ததியின்முன் "மானமுள்ள தமிழனிற்கு கோவம் வரும்---" "அகதிக்காசில் வயிறுவளர்த்துகொண்டு..." என்று செந்தமிழ் பாசத்தை பொழிந்தீர்கள் எண்டால் நீங்கள் புலிகளிற்கும் தமிழ்தேசியத்திற் எதிராக பிரச்சாரம் செய்வேர்பக்கம் தான் புலத்திலுள்ள எதிர்கால சந்ததியை தள்ளிவிடுவீர்கள்.

தூங்குபவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியாது எனவே புலி எதிர்பரசியல் நடத்துவோரோடும் தமிழ்தேசியத்தை கொச்சைப்படுத்துவோரோடும் விவாதம் செய்து கருத்தாடி திருத்தமுடியாதொன்பதை நானும் நம்புகிறேன். எமது முயற்சி இவர்களை திருத்துவதல்ல. கருத்துச்சுதந்திரம் உள்ள மேலத்தேயத்தில் எவ்வளவு நியாயமான உண்மையையோ நிதானமாக முன்வைத்தால்தான் அது வெற்றியளிக்கும்.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் போரளிகளாக இருப்பார்கள் பலரிற்கு மாவீரர்களையும் தனிப்பட்டரீதியில் தெரிந்திருக்கும்ää உங்களிற்கு தெரிந்தவர்கள் அங்கவீனமுற்று இருப்பார்கள். போரினால் எமக்கு இவ்வாறு கிடைத்த நேரடி அனுபவங்களை போராட்டத்தின் நியாயத்தன்மையை ஆளமாக களங்கம் இன்றி உணரும் வகையில் பக்குவப்படுத்தியுள்ளது.

இந்த பக்குவத்தை புலத்தில் வழர்ந்துவரும் எமது எதிர்கால உறவுகளிடம் எதிர்பார்ப்பது நியாயமென்று நான் நினைக்கவில்லை. அவர்களை மூளைச்சலவை செய்வதில் எதிரி அக்கறை காட்டுகிறான்.
அதை எமது பக்கம் நியாயம் இருப்பினும் நிதானமாக கூறித்தான் வெற்றிகொள்ளமுடியும்.

புலியெதிர்ப்பு அரசியல் நடத்துவோரின் வாதங்களிற்கு எவ்வாறு பிரதிவாதம் நிதானமாக வைக்கப்படவேண்டு என்று கூறுங்கள் அது ஆக்கபூர்வமாக இருக்கும்.

இத்தோடு இன்னுமொன்றை கூற விரும்புகிறேன். எமது மக்கள் மத மூடநம்பிக்கைகளிற்கு எவ்வாறு அடிமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழ் தேசியத்திற்கு ஆதரவுக்கருத்தெழுதுவோர் சிலரில் காணலாம். இந்த ஆதரவுக்கருத்து கூறுவேரின் கண்மூடித்தனமான வர்ணனை எவ்வாறு எதிரியின் கொச்சைப்படுத்தலுக்கு துணைபோகிறது என்பதை உணர்வார்களா?
எம்மில் சிலர் தலைவராக தளபதியாக பிரபாகரனை பார்க்காது கடவுளாக வர்ணித்து எதிரியின் ஏளனத்திற்கு உதாரணங்களாக தம்மை பிரகடனப்படுத்துகிறார்கள்? எமது சமுதாயாத்தால் நேர்மையான நீதியான கடமையுணர்வுள்ள தலைவராகவும் இராணுவ அரசியல் இராஜதந்திர யுக்திகள் தெரிந்த இயற்கை அறிவுள்ள ஒரு சிறந்த தளபதியாக ஏன்பார்காது கடவுள்நிலைக்கு அவரை உயர்த்தி அவரை சங்கடத்திற்கு உள்ளாக்குறீர்கள்?


Messages In This Thread
[No subject] - by Bond007 - 05-27-2005, 03:00 PM
[No subject] - by kirubans - 05-27-2005, 03:50 PM
[No subject] - by Sooriyakumar - 05-27-2005, 04:20 PM
[No subject] - by கறுணா - 05-27-2005, 07:19 PM
[No subject] - by வியாசன் - 05-27-2005, 08:47 PM
[No subject] - by cannon - 05-27-2005, 11:57 PM
[No subject] - by cannon - 05-28-2005, 12:08 AM
[No subject] - by kirubans - 05-28-2005, 01:01 AM
[No subject] - by கறுணா - 05-29-2005, 02:17 PM
[No subject] - by kuruvikal - 05-29-2005, 02:38 PM
[No subject] - by Bond007 - 06-09-2005, 02:32 PM
[No subject] - by kirubans - 06-10-2005, 03:36 AM
[No subject] - by narathar - 06-11-2005, 10:47 AM
[No subject] - by kurukaalapoovan - 06-11-2005, 08:14 PM
[No subject] - by ஊமை - 06-12-2005, 01:27 AM
[No subject] - by ஊமை - 06-12-2005, 01:32 AM
[No subject] - by ஊமை - 06-12-2005, 01:51 AM
[No subject] - by kirubans - 06-12-2005, 02:35 AM
[No subject] - by kirubans - 06-12-2005, 02:43 AM
[No subject] - by kuruvikal - 06-12-2005, 03:50 AM
[No subject] - by vasisutha - 06-12-2005, 03:56 AM
[No subject] - by kurukaalapoovan - 06-12-2005, 04:06 AM
[No subject] - by narathar - 06-12-2005, 10:17 AM
[No subject] - by narathar - 06-12-2005, 10:56 AM
[No subject] - by kuruvikal - 06-12-2005, 11:31 AM
[No subject] - by ஊமை - 06-12-2005, 02:04 PM
[No subject] - by வலைஞன் - 06-12-2005, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)