06-12-2005, 01:45 AM
எஸ்.வி.சேகரின் கனடிய வருகைக்கு எதிராக போர்க்கொடி!
[சனிக்கிழமை, 11 யூன் 2005, 08:23 ஈழம்]
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/svsekar-300.jpg' border='0' alt='user posted image'>
தென்னிந்திய தமிழ் நகைச்சுவை நடிகரும் தமிழ்த் தேசியத்தின் பகையாளியுமான நடிகர் எஸ்.வி.சேகரின் கனடிய வருகையை புறக்கணிக்குமாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கனடா ரொறன்ரோவில் வெளியாகும் தங்கத்தீபம் செய்தித்தாளின் கலை விழாவிற்கு தமிழ்த் தேசியத்தின் பகைவர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி.சேகர் அழைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் இருந்து நடிகர்கள் கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பகையாளியான நடிகர் சேகர் அழைக்கப்படுவதை தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கனேடியத் தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்.
நடிகர் சேகர் காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களைக் கக்கி வந்திருக்கிறார். இராசிவ் கொலை வழக்கில் நால்வருக்குத் தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினப் பகைவன் 'துக்ளக்' சோவின் கருத்தே தனது கருத்தும் என இவர் கூறியுள்ளார்.
இராசிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகிய நான்கு பேருக்கும் கருணை காட்டுமாறு இந்திய ஆட்சித்தலைவருக்கு கையெழுத்துக்கள் வாங்கி அனுப்பப்பட்டன. திரைத்துறையில் இருப்பவர்களிடம் கையெழுத்து சேகரித்தவரில் கவிஞர், தமிழ்த் தேசிய உணர்வாளர் அறிவுமதியும் ஒருவர். கவிஞர் அறிவுமதி அவர்கள், நடிகர் சேகரிடம் கையெழுத்துக் கேட்டபோது கையெழுத்துப்போட மறுத்த அவர் சொன்ன பதில்தான் இது. 'தூக்குத் தண்டனையை ஒருபோதும் குறைக்கக்கூடாது" என்பது தான் துக்ளக் சோவின் கருத்து.
தமிழில் பெயர்ப்பலகை, தமிழ்மொழியில் திருக்கோயில் வழிபாடு போன்றவற்றுக்கு நடிகர் சேகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர் செல்வி ஜெயலலிதா. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றும் வி.புலிகளை பயங்கரவாதிகள் என்றும் கொச்சைப்படுத்தி கடுமையாகத் தாக்கிப்பேசி வருகிறார்.
விடுதலைப் புலிகளுக்கு வாய்மொழி ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக எல்லை கடந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்திய நடுவண் அரசால் கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தைத் தமிழ்த் தேசியவாதிகளான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட 9 பேர் மீது ஏவி அவர்களைக் கைது செய்து வெஞ்சிறைகளில் 19 மாதங்கள் ஜெயலலிதா அடைத்து வைத்தார். ஜெயலலிதாவின் இப்படிப்பட்ட வெறிபிடித்த நடவடிக்கைகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்தான் நடிகர் சேகர்.
தமிழகத்தில் இருந்து கொண்டு எமக்காகக் குரல் கொடுக்கும் இனமானத் தமிழர்களது குரல்வளையை நசிப்பதில் முன்னிற்கும் ஜெயலலிதாவிற்கு தோள் கொடுக்கும் சேகர் போன்றவர்களை நாமே பெருந்தொகைப் பணம் கொடுத்து இங்கு அழைப்பது எமக்காக சிறை சென்றவர்களை அவமதிப்பது போன்றதாகும்.
நடிகர் சேகர் வருவதையிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோடு பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வர நண்பர்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நாம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
எனவே தமிழினப் பகைவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நடிகர் சேகர் கலந்துகொள்ளும் விழாவை முற்றாகப் புறக்கணிக்குமாறு கனடா வாழ் தமிழ்மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விழாவில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டாம் என்று கலைஞர்களையும் நடன ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
விழா பற்றிய விளம்பரங்களை வெளியிடவேண்டாம் என சகல இனமான ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே விழா விளம்பரங்களை முழக்கம், உலகத்தமிழர் போன்ற கிழமை ஏடுகள் பிரசுரிக்க மறுத்துள்ளதற்கு எமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்த் தேசியவாதிகள் தங்களுக்குள் முரண்படுவது விரும்பத்தக்கதல்ல. அது தமிழ்ப் பகைவர்களுக்கு அனுகூலமாக இருந்துவிடும். இந்தக் கடைசி நேரத்திலாவது நடிகர் சேகர் வருகையை விழா ஏற்பாட்டாளர் நிறுத்தினால் கலை விழா வெற்றி பெற சகல உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
<b>¿ýÈ¢ Ò¾¢Éõ þ¨½Âõ</b>

<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>