06-12-2005, 12:43 AM
Mathan Wrote:சரி நாரதர். நீங்கள் உங்கள் துறை குறித்தும் அதில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கின்றது, வேலை அனுபவங்கள் ஏதும் உண்ணா என்பதை எல்லாம் விளக்கமாக எழுதுங்களேன்
மதன் , நீங்கள் கேட்டவை,
(சரியான தமிழ் கலச்சொற்களைப் பாவிக்காவிடில் மன்னிக்கவும், எழுத்துப் பிழைகளுக்கும்)
துறை: விமானத்தொழில்னுட்பவியல்.
வேலை வாய்ப்பு: நீங்கள் இருக்கும் நாட்டைப்பொறுத்தது.
அத்தோடு இதை நான்கு பிரிவாக பிரிக்கலாம்.
1)விமானச்சேவை நிறுவனங்கள்.
2)விமான உற்பத்தி நிறுவனங்கள்.
3)விமானப்படை.
4)படைத்துறை சார்ந்த நிறுவனங்கள்.
பொதுவாக 3 ற்குள்ளும் 4 ற்குள்ளும் நுழைவதற்கு அந்த அந்த நாடுகளின் குடி உரிமை அவசியம்.புலத்தில் உள்ள பெற்ரோர் தமது பிள்ளைகளை இத் துறையில் ஊக்குவிக்கலாம்.
அடுத்ததாக (1) ல் வேலை செய்வோர் உலகளாவிய ரீதியில் வேலை எடுக்கல்லாம், முதலாவது வேலயில் உள் நுளைவதே சிரமமான விடயம்.
(2) உலகளாவியரீதியில் 4 நிறுவனான்களச் சொல்லலாம்.
a)Boeing(USA)
b)Airbus (France/UK)
c)Embraer (Brasil)
d)Bombardier (Canada)
மேலும் பல நிறுவனக்கள் உதிரிப்பாகங்களைத் தயாரிகின்றன.
BAE systems(UK),Rollsroyce(UK)Thales(France)Messier Dowty (UK,France)
Kawasaki heavy industries(Japan),Parker(USA)GE(USA)Prat and whitney(USA/Canada)
அடுத்ததாக படைத்துறை சார்ந்த நிறுவனன்களாக,
a)NorthropGruman.(USA)
b)BAE systems(UK)
c)Dassault(France)
d)Raytheon(USA)
e)HAL,Hindustan aeronautics Ltd,/DRDO defence reserach and development organisation (India)
இத் துறையில் ஆர்வமுள்ளோர் இந்தியா (IIT,IISC), அவுஸ்த்ரேலியா,இங்கிலாந்து,கனடா,அமெரிக்கா போன்ற நாடுகளில்
உள்ள பல்கலைக்கழகங்களில் இத் துறயை கற்கலாம்.
இறுதியாக இத்துறை நமது தேசத்தின் விடுதலையிலும் அதன் வருங்கால பாதுகாப்பையும் உறுதி செய்ய வல்ல துறை என்பதால் புலத்தில் உள்ள பெற்ரோர் விருப்பமுள்ள பிள்ளகளை ஊக்கப்படுத்தவும்.

