06-11-2005, 11:27 PM
தூயா உங்கள் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்த கருப்பொருள் நல்லதொன்று. சிறுகதைப்பாணியும், பயணக்குறிப்பும் கலந்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சென்று சிலவிடயங்களை எழுதியிருக்கலாம். கதையில் ஒரு கருப்பொருள் இருந்தால் உங்களுக்கு எழுதுவதற்கு சுலபமாக இருக்கும். இரண்டு வெவ்வேறு விடயங்களைக் கலப்பதால் உங்களுக்கு எழுதும் போதும் கடினம், வாசிப்பவர்களுக்கும் குழப்பத்தைத் தரும் - திருப்தியைத் தராது.
இன்னும் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து எழுதுவதுவே உங்களுக்கு பயிற்சியைத் தரும். உங்கள் அனுபவங்களை சிறுகதைகளாக தொடர்ந்தும் தாருங்கள். அதேநேரத்தில் பிறர் எழுதிய சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள். அதுவும் நிறைய அனுபவங்களைத் தரும்.
கதையில் உணர்வுபூர்வமான சில விடயங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள். அருமை. உங்களின் அடுத்த சிறுகதையை எதிர்பார்க்கிறேன்.