06-11-2005, 05:55 PM
முதலில் பாராட்டுக்கள். இரண்டாவது பூக்கள் வெற்றியைப் பார்த்துத்தான் "கனவுகள் நிஜமானால்" திரைப்படம் இலன்டனில் தயாரிக்கப்படுகிறது என்கிற தகவல் எந்தளவு தூரம் சரியென்பது தெரியவில்லை. மூன்றாவது பூக்கள் திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்த அளவில் இந்திய சினமாவை மறுபிரதி செய்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. படத்தை முழுமையாகப் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைத்தால் எனது விமர்சனத்தை எழுதுகிறேன். பூக்கள் படம் மட்டும் பொருளாதார ரீதியில் வெற்றியளித்தால், அத்திரைப்படம் இந்திய போலிச்சினிமாத் தாக்கத்தையுடைய சினிமாவாக இருந்தால், அதுவே எதிர்வரும் காலங்களில் உருவாக இருக்கும் ஈழத்தமிழர் புலம்பெயர் சினிமாவிற்கான தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிடும். எதற்கும் படம் பார்த்துவிட்டுத்தான் கருத்தெழுத முடியும்.
மதன் இலண்டனில் படத்தை பார்த்துவிட்டு இங்கெழுதுங்களேன்?
மதன் இலண்டனில் படத்தை பார்த்துவிட்டு இங்கெழுதுங்களேன்?

