06-11-2005, 07:04 AM
தேரர் இன்று உண்ணவிரதத்தை கைவிடுவார்!
[சனிக்கிழமை, 11 யூன் 2005, 07:49 ஈழம்] [தெ.அருணன்]
பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதமிருக்கும் தேரர் ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து இன்று சனிக்கிழமை தனது உண்ணாவிரதத்தை கைவிடக்கூடும் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன.
பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்த வரைவின் இறுதி வடிவத்தை மகாநாயக்கர்களுக்கு காண்பித்த பின்னர் அதில் கைச்சாத்திடுவதற்கு தயாராக உள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை தன்னைச் சந்தித்த மகாநாயக்கர்கள் குழுவினரிடம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எழுத்துமூலம் உறுதியளித்ததை அடுத்து உண்ணாவிரதமிருக்கும் தேரர் தனது போராட்டத்தை கைவிட முன்வந்துள்ளதாக தெரியவருகிறது.
நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்துப் பேசிய மகாநாயக்கர்களிடம் இந்த உறுதிமொழியை வழங்கியதுடன் பொதுக்கட்டமைப்பு குறித்து மீண்டும் அவர்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறியுள்ளார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடுவது குறித்து எந்த திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை. ஊடகங்ளில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டாம் என்றும் மகாநாயகர்களிடம் ஜனாதிபதி வேண்டுகொள் விடுத்துள்ளார்.
புதினம்