09-29-2003, 04:11 PM
Boysக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
'பாய்ஸ்' படத்தைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் விதத்திலும், இளைஞர்களை திசைமாற்றும் வகையிலும் பாய்ஸ் படத்தில் காட்சிகள் இருப்பதால் அதை தடை செய்யக் கோரி ஏற்கனவே பேராசிரியை சரஸ்வதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வாசுகி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், மத்திய, மாநில தணிக்கை வாரியம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆந்திராவில் உள்ள சென்சார் போர்டில் இந்தப் படத்தை தணிக்கை செய்தவர்களில் யாருக்குமே தமிழ் தெரியாது என்ற விவரமும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தணிக்கை செய்தால், ஆபாசமான வசனங்கள் கட் ஆகிவிடும் என்பதால் மிக விவரமாக ஷங்கர் இதனை ஆந்திராவில் போய் சென்சார் செய்துள்ளார்.
இந் நிலையில் இப்போது தமிழ்ப் படங்களுக்கு தரப்படும் விளம்பரங்களில், ஆபாசமில்லாத திரைப்படம், விரசக் காட்சிகள் இல்லாத படம் என்று பஞ்ச்லைன் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 'அலை' படத்தின் மூலம் இது போன்ற விளம்பரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போது பல படங்களுக்கும் இது போன்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்துள்ளன.
எல்லாம் 'பாய்ஸ்' தந்த பாடம் தான்!
----------------------------------------------
தகவல் தற்ஸ் தமிழ் டொட் கொம்மில் இருந்து நேரடியாக பிரதியெடுக்கப்பட்டது...!
உதவி சுரதாவின் பொங்குதமிழ்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>