06-11-2005, 12:44 AM
viyasan Wrote:அடிதடி முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் மேல் குற்றம் சொல்லாதீர்கள். கிருபனுக்கு வக்காலத்து வாங்கிறதை விட்டு விட்டு நியாயத்தை பேசுங்கள். ஒரு தாய் மேல் தவறுகள் இருந்தால் அதை வெளிச்சம் போட்டு காட்டுவீர்களா? தாயின் தவறுகளை சொல்லித்திருத்த வேண்டும். அதை விடுத்து எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படாத வக்கிரமான உறவுகள் தகப்பன் மகள் சகோதரர்கள் என்று கதையளந்திருக்கின்றார். அதற்கு நீங்கள் பிற்பாட்டு பாடுகின்றீர்கள்.
வாலி எப்படி எப்படி சமைஞ்சது எப்படி என்ற பாட்டு எழுதியபோது யாரோ கேட்டார்கள் வாலி தன்னுடைய மகளை இப்படி கேட்பாரா என்று இந்த கிருபன் தன் தாய் சகோதரர்களுடன் இதை விவாதிப்பாரா? அல்லது நீங்கள் உங்கள் சகோதரியை யாழ் களத்தில் இந்துமதமும் ஆண்பெண் உறவும் என்ற சிறந்த கட்டுரை வருகிறது அதை படி தங்கையே என்று சொல்லமுடியுமா? அப்படி உங்களால் சொல்ல முடியுமென்றால் தாராளமாக இந்த கட்டுரை வரவேற்றுக்கொள்ளுங்கள் . :roll: :roll: :roll:
எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படாத வக்கிரமான விடயங்களைத்தான் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்கள். கதையளந்திருந்தால், இல்லை என்பதற்கு ஆதரங்களை வைக்க வேண்டியதுதானே.
அழுகல்களை அமுக்கி வெளித்தோற்றத்தில் நல்லவர் போன்று காட்சிதரவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியவிடயமல்ல. இது நாங்களே எங்களை ஏமாற்றுவத்ற்குச் சமன்.
<b> . .</b>

