06-10-2005, 08:29 PM
இன்னும் எவரும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து முடியவில்லையா? எனக்கென்னவோ மதனின் கேள்விக்கும், அந்த நான்கு பதில்களுக்கும் பொருத்தமில்லையென்றே தோன்றுகிறது. தமிழர்கள் எப்படித் திருமணம் செய்யவேண்டும் என்று வரவேண்டும் அல்லது தமிழர்கள் எப்படி தமது இல்லற வாழ்வை அமைக்கவேண்டும் என்று வருவதே மதனின் பதில்களுக்கு பொருத்தமான கேள்விகளாக அமையும். அப்படி இல்லையெனில் மதன் இந்தக் கேள்வியைத்தான் கேட்க விரும்பியிருந்தார் எனின் பதில்கள் வேறாக அமையவேண்டும்.
தமிழர்கள் எப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
1. சாதகம் பார்த்து
2. சுயம்வரம் வைத்து
3. நண்பர்களில் ஒருவரை
4. பெற்றோர் தேர்வு
5. தன் விருப்பு
6. விளம்பரங்கள் (இணையம், நாளிதழ்)
7. வேறு வழிகளில்
சில பதில்கள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை.
என் வாழ்க்கைத்துணையைத் நான் எப்படித் தேர்ந்தெடுப்பேன்:
என்னைப் பொறுத்தவரை பெற்றோர் தேர்வாகவும் இருக்கலாம், ஆனால் அவர்களின் தேர்வு எனது வாழ்க்கைத் துணையாய் வருவதற்கான தகுதிகளோடு அமையவேண்டும்.
பெண் நண்பர்களில் ஒருவரை வாழ்க்கைத் துணையாய் ஆக்கிக்கொள்வதிலும் எனக்கு பிரச்சினையில்லை.
அதேபோல் முன்னர் ஒரு கருத்தில் குறிப்பிட்டதுபோல் ஈர்ப்பின் அடிப்படையில் எனது சுயவிருப்பாகவும் அமையலாம்.
இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும், என்னைப்போல் எனது வாழ்க்கைத்துணைக்கும் என்னோடு இணைந்து வாழ்வதற்கான விருப்பும், ஈடுபாடும் இருக்கவேண்டும். அதேபோல் எப்படி இணைந்து வாழப்போகிறோம் என்பதிலும் ஒத்தகருத்து அமையப் பெற்றிருக்குவேண்டும்.
சுயம்வரம், சாதகம் பார்த்தல், விளம்பரம் கொடுத்து தேடல் போன்றவை எனக்கு அவசியமற்றவை, எனக்கு அர்த்தமற்றவை.