Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரிக்கா அம்மையார் தமிழரா ?
#2
சந்திரிகா தமிழரின் வழித்தோன்றல் என்பதால் புலிகள் மீது அவருக்கு அதீத அக்கறை

தேசிய சங்க சம்மேளன செயலாளரின் கண்டுபிடிப்பு

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமிழரின் வழித்தோன்றல் எனவும், அதாவது, பண்டாரநாயகம் பரம்பரையில் தோன்றியவர் என்றும், எனவே தான் புலிகள் மீது அவருக்கு அக்கறை அதிகமென்று தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.

தமிழர்களின் வழித் தோன்றல் என்பதால் தான் இன்று உயிர்த் தியாகத்தை செய்தாவது பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவேன் என்கிறார்.

கிறிஸ்தவ அடிப்படைவாதிகளான ஹரீம்பீரிஸ், ராம் மாணிக்கலிங்கம் ஆகியோரின் பணயக் கைதியாக சிக்கியுள்ளார் ஜனாதிபதி. எனவே தான் பௌத்தர்களின் எதிர்ப்பிற்குத் தான் அடிபணியப் போவதில்லையென சர்வதேச ரீதியில் கூறி வருகிறார்.

பொதுக் கட்டமைப்புக்கு எதிராக மனுவொன்றை ஜனாதிபதிக்கு கையளிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தோம். ஆனால், இதுவரையில் எதுவித பதிலும் இல்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பௌத்த மதத்தின் மீது பற்றுக்கொண்டவர் என மக்களை ஏமாற்றும் நாடகக் கலைஞர். கோழைத்தனமாக மதத்தைக் காட்டி தன் இருப்பை வளர்த்துக்கொள்ள முனைபவர். எனவே தான் உண்ணாவிரதமிருந்த ஓமல்பே தேரரை நள்ளிரவில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திக்க வந்தார்.

எனவே, பௌத்த சிங்கள மக்கள் பிரதமரை நிராகரிக்க வேண்டும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Thinakural
Reply


Messages In This Thread
[No subject] - by adithadi - 06-10-2005, 03:57 PM
[No subject] - by தூயா - 06-10-2005, 04:04 PM
[No subject] - by Nilavan - 06-10-2005, 04:14 PM
[No subject] - by jeya - 06-10-2005, 04:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)