09-29-2003, 07:32 AM
மரத்தடி இணைய களத்திலிருந்து
அன்பு நண்பர்களே!
பாய்ஸ் படத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்படும் இந்த நேரத்தில், இலங்கையின்
தென்பகுதி முஸ்லிம் கிராமமொன்றில் இடம்பெற்ற (தொடர்கின்ற) சம்பவமொன்றைப்பற்றி எழுதலாம் என்று
நினைக்கின்றேன்.
. . . . .
அது ஒரு கலவன் பாடசாலை (அiஒநன ளஉhழழட). அங்கு சமீப காலமாக பாடசாலையினுள் மாணவர்கள்
காதல்லீலைகளில் ஈடுபடுவதாக அதிபருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்தன. அதிபர் பலமுறை மாணவர்
பொதுக்கூட்டங்களில் எச்சரிக்கையும் செய்தார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை, தங்கள் வகுப்புக்களினுள் அதிகாலையில் வந்து மறைந்திருந்து பாடசாலை
தொடங்கும் வரை பல ஜோடிகள் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் தங்களை மிரட்டுவதாகவும் சின்ன வகுப்பு
மாணவர்கள் இரகசியமாக ஆசிரியர்களிடம் முறையிட்டனர்.
அடுத்தநாள் அதிகாலையில் திடீரென்று அந்த வகுப்பறைகளிற்கு சென்ற ஆசிரியர்களிற்கு பலத்த அதிர்ச்சி
(எதிர்பார்த்ததைவிட மோசமாக). அங்கே தங்களை மறந்து ஆபாசமான நிலையில் இரண்டு ஜோடிகள் இருந்தன
(15, 16 வயதினர்). திடீரென்று ஆசிரியர்களைக்கண்ட அவர்களிற்கும் பலத்த அதிர்ச்சி.
அந்த இரண்டு ஜோடிகளையும் அதிபரிடம் அழைத்துச்சென்ற ஆசிரியர்கள் நடந்ததை சொல்ல அந்த நால்வரையும்
உடனடியாக வீட்டிற்கு சென்று பெற்றோர்களை கூட்டிவரச்சொன்னார் அதிபர். ஆனால் தங்கள் வீடுகளிற்கு செல்லாது
பாடசாலைக்கு எதிரிலுள்ள வீட்டிலுள்ள நண்பனிடம் சென்று அங்கேயே தங்கிவிட்டார்கள் அந்த நால்வரும். அதன்பிறகு
நடந்த சம்பவங்கள்தான் உண்மையில் அதிர்ச்சியானவை.
அந்த நால்வருக்கும் ஆதரவாக அவர்களின் சக ஆண் மாணவர்கள் எல்லோருமாக சேர்ந்து பாடசாலையிற்கு வராது
விட்டனர். அதற்கும் மேலே போய் ஆசிரியர்கள் வகுப்பிற்கு வந்தால் படிப்பிப்பதை மட்டுமே செய்ய வேண்டும் மற்ற
விடயங்களில் தலையிடக்கூடாது என்று ஆசிரியர்களுக்கே அறிவுரை சொல்லி வாக்குவாதப்பட்டனர்.
இறுதியாக ஆசிரியர்களெல்லாரையும் போய் "பாய்ஸ்" படத்தை பார்த்து எப்படி இளவயது காதலர்கள் வாழ்க்கையில்
முன்னேறுகிறார்கள் என்று அறிந்துகொள்ளும்படியும் அவர்கள் சொன்னார்களாம்.
தாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அந்த காதலர்களை உயர்த்தப்போவதாக அந்த 15, 16 வயது மாணவர்கள்
கூறிக்கொள்கிறார்கள். இதற்காக பாடசாலைக்கு போவதையும் நிறுத்திவிட்டார்கள் (கிட்டத்தட்ட 25 பேர்).
ஆசிரியர்களுக்கு பயமுறுத்தல்கள் வேறு.
இதனால் இப்பொழுது அந்த ஊரில் பல பிரச்சனைகள். இன்னமும் தொடர்கின்றது.
. . . . .
இலங்கையின் வடகிழக்கு தமிழ் பிரதேசங்களில் "பாய்ஸ்" படம் இன்னமும் திரையிடப்படவில்லை. இனியும்
திரையிடப்படமாட்டாதென்றே நினைக்கின்றேன். ஆனால் தென்பகுதியில் (கொழும்பு உட்பட) திரையிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களே பெரும்பாலும் இந்தப்படத்தை பார்க்கச்செல்கின்றனர். இலங்கையின் ஒரேயரு தமிழ்
தொலைக்காட்சி(சக்தி ரிவி)யில் தொடர்ச்சியான விளம்பரம் (வேறெந்தப்படத்திற்கும் இவ்வாறு
இருந்ததில்லை), "பாய்ஸ்" பட நடிகர்களின் இலங்கை விஜயம் என்று பல்வேறு முயற்சிகளால் முடிந்த அளவு பணம்
சம்பாதிக்க முயற்சிக்கின்றார்கள்.
எனது சொந்தக் கருத்தில் "பாய்ஸ்" என்பது தேவையற்ற, நடைமுறை சாத்தியங்கள் குறைந்த, கருத்துக்களை திரையில்
காட்டி அற்பத்தனமாக பணம் சம்பாதிப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.
அன்புடன்,
விஜயாலயன்