06-09-2005, 11:48 PM
sathiri Wrote:பெரியாரின் தனிப்பட்ட விடயம் தர்க்கத்திற்குரியதாக இருந்தாலும் இன்று தமிழ்நாட்டில் ஏன் கன்னடா கேரளாவிலும் தாழ்ந்த சாதியினர் மேல்சட்டையும் காலில் செருப்பும் போடுகின்றனர் என்றால் அதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்பது மறுப்பதற்கில்லை
அவரோட கூட இருந்த அண்ணாவும் தான் முழங்கினார்..முதலமைச்சராகியும் எதைச் சாதித்தார்... கொண்ட தனித் தமிழ்நாட்டையும் கைவிட்டதுதான் மிச்சம்....! காலத்துக்குக் காலம் தங்கள் சுயநலனுக்காகவும் அரசியலுக்காகவும் மொழியை மதத்தை சாதியை எதிர்ப்பதாகக் கூறி வேறுபாடுகளை வளர்த்துப் பிரச்சனைகளை உருவாக்கி அதில் குளிர்காய்ந்ததுதான் தமிழ்நாட்டின் வரலாற்றில் நடந்திருக்கிறது...! அன்றேல் இன்றும் சாதியம் அரச அங்கீகாரத்துடம் தமிழ்நாட்டில் அமுலில் இருக்க முடியுமா என்ன...அதுவும் பெரியார் வால் பிடிகள்..பல தடவைகள் முதலமைச்சர்களாக இருந்தும்...இன்றும் சாதியம் அரச அங்கீகாரத்துடன் நடைமுறையில் இருக்கிறது...! எந்தச் சீர்திருத்தமும் வரவில்லையே ஏன்...??! இது எதைக்காட்டுகிறது...பெரியாரும் பொய்...அவரின் சீடர்களும் பொய் என்பதையே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

