Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவங்கள் ..
#1
உதயங்கள் எத்தனையோ
மறைந்து மறைந்து வெளுக்கின்றன

பொழுதுகள் மாறுகின்றன
விநாடிகள் நிமிடங்களாகின்றன
நிமிடங்கள் மணித்தியாலங்களாகின்றன
மணித்தியாலங்கள் நாட்களாகின்றன

நாட்கள் மாதங்களாகின்றன
மாதங்கள் வருடங்களாகின்றன
வருடங்கள் வயதைத் தருகின்றன
வயதுகள் எதனைத் தருகின்றன.........?

வாழ்க்கையில் எதனைக் கற்றோம்..?
இன்பத்தில் எதனைக் கண்டோம்..?
துன்பத்தில் எதனைப் பார்த்தோம்..?
உண்மையில்....
எதனைத்தான் உணர்ந்தோம்..?

வருடிய தென்றல்
வருடிவிட்டுச் சென்று விடுகிறது
வீசிய புயலும்
அழித்துவி;ட்டு ஓய்ந்து விடுகிறது

தண்ணீரிலும்
கண்ணீரிலும்
தத்தளிப்பிலும்
பரிதவிப்பிலும்

என்றும் கலந்திருக்கிறோம்..
என்றுதான் உணரப் போகிறோம்..?

எது ..எதைத் தந்தது
எதனால் எது கிடைக்கப்போகிறது
எதை எதனால் அடையக்கூடியது
எதற்கு எதெல்லாம் தேவைப்படுகிறது..?

அனுபவங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் !

அன்புடன்,
வையாபுரி.
Reply


Messages In This Thread
அனுபவங்கள் .. - by vaiyapuri - 09-28-2003, 09:11 PM
[No subject] - by இளைஞன் - 09-28-2003, 09:16 PM
[No subject] - by sOliyAn - 09-29-2003, 12:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)