06-09-2005, 01:23 PM
அகலி அக்கா எழுதினது தான் சரி. குருவியண்ணாக்கு ஒண்டுமே தெரியல.பெரியார் திராவிடக் கழகத்தின்ர தலை. குரவியண்ணா வாலெண்டுறார் பாவம். திராவிடக் கழகத்தில இருந்துதான் திராவிட முன்னெற்றக் கழகம் வந்ததெண்டு ஒரு பேட்டில கேட்டனான். அண்ணாக்கும் பெரியாருக்கும் உந்த கல்யாணப் பிரச்சனல கருத்து மோதல் வரேக்கு பிரிஞ்சவை. ஆனால் தனக்கு முதலமைச்சர் பதவி வந்தோடன அண்ணா அத பெரியாரிட்ட குடுக்க போன கதை குருவியண்ணாக்கு தெரியாதாக்கும். திராவிடக் கழகத்த தொடங்கினாப் பிறவு பெரியார் அரசியல் கட்சியளில தன்ன ஈடுபடுத்தேல. அரசியலில அவர் செல்வாக்கு செலுத்தினவர் ஐயோ ஐயோ. பெரியர் முந்தி கோயிலிலயும் வேலை செய்தவர் தெரியுமோ? பெரியார்தான் தமிழ் எழுத்து சீர்திருத்தத்த பற்றி கதைச்சு பிறகு அத ஆரோ அமுல்படுத்தினவை. பெரியாரொண்டும் கடவுளில்லத்தானே அவரும் உங்க இருக்கிற அண்ணாக்கள் அக்காக்கள் மாதிரி மனிசன் தானே. தப்பு செய்திருப்பார் யாரில்லையெண்டது. ஆனா கடவுளெண்டு சொல்லிப்போட்டு தப்பு செஞ்சவை தானே கொடுமை. பெரியாற்ற வர்லுகளெல்லாம் இண்டைக்கு பச்சோந்திதனமா கட்சி மாறி மாறி வஆதரவு குடுக்குதுகள். உந்த பெரியா லேசுபட்ட ஆளில்ல குருவியண்ணெ. நிறைய தப்பெல்லாம் செய்திருக்கிறார். வை இந்த திராவிடக் கழகக் காறரும் கட்சிக்காறரும் சாதியில்ல சாதியில்லயெண்டு சொல்லிட்டு உந்த பூசை செய்யிறவையை பாப்பான் பாப்பான் எண்டு சாதிவெறிபிடிச்சு தாக்கிக்கொண்டு திரியினம். எல்லாம் உப்பிடித்தான் ஒரே குட்டெல ஊறின மட்டையெண்டு சொல்லுறவையெல்லோ அதுமாதிரி. பெரியாற்ற வாயும் பொல்லாதா வாய். கதைக்கேக்க நாகரியமா கதைக்கத் தெரியாது அந்தாளுக்கு. பாப்பானெண்டு அவைய சொல்லி நக்கலடிக்கிறதும் கேவலப்படுத்துறதும் அவங்கள் உவரை வெங்காயமெண்டுறதும் இவர் அவைய காட்டுமிராண்டடியெண்டுறதும் உப்பிடி அவயள் ரண்டு பக்குத்துகாறரும் சண்டைபிடிச்சுகொண்டு தான் இருந்தவை. இப்பவும் உப்புடித்தான். புலியளுக்கு முந்தி ஆதரவு சொல்லிச்சினம் இப்ப உவை வாய் திறக்கிறத காணேல. என்னவோ. கடுவுள் இல்லை கடவுள் இல்ல எண்டு சொன்னவை இண்டைக்கு பெரியாரையும் மனுசியையும் கடவுள் மாதிரி கும்புடுயினம். ஐயோ ஐயோ உத சொன்னா தலையிடிக்கும்.

