09-28-2003, 08:18 PM
விஜய் டிவியில் 'மதன் திரைப்பார்வை'யில் டைரக்டர் ஷங்கரிடம் 'பாய்ஸ் 2 எடுப்பீர்களா' என்று கேட்டபோது, அவர் புன்னகைத்து, 'நான் வேற திசையில் யோசிச்சுகிட்டிருக்கேன்' என்றார்.
'பாய்ஸ்' திரைப்படம் வெளிவந்தபின் நிகழ்ந்த சம்பவங்களே ஒரு முழுதிரைப்படமோ, அதிகபட்சம் குறும்படமோ எடுக்கும் அளவுக்கு உள்ளன. இன்னமும் 'பாய்ஸ்' பரபரப்பு ஓயவில்லை. தினம்தினம் எதிர்ப்பு தெரிவிக்க புதியபுதிய சங்கங்கள், அமைப்புகள் புறப்படுகின்றன. தமிழ்நாடே இந்தப் படத்தை எதிர்ப்பதன்மூலம் தன்னைப் புனிதப்படுத்திக்கொள்ள ஒரு எளிய வாய்ப்பு, Soft target கிடைத்தது போல் வீறுகொண்டு எழுந்திருக்கிறது. கிராமத்தில் பிடிபட்ட பாத்திரத் திருடன் போல, ஆளாளுக்கு இதைச் சாத்துகிறார்கள். பெரும்பாலான பத்திரிகைகள் 'பாய்ஸ்' படத்தின் கவர்ச்சிகரமான படங்களை முழுப்பக்கமும் பிரசுரித்துவிட்டு, விமர்சனத்தில் 'அய்யயோ! இப்படியெல்லாம் எடுத்து நம் இளைஞர்களைக் கெடுக்கிறார்களே!' என்று தாக்கியிருந்தன. 'ஆனந்த விகடன்' இதை, ஒரு வார்த்தையில், நாய் கொண்டு போட்ட வஸ்¢துவைப்போல ஒதுக்கியிருந்தது. . 'எக்ஸ்பிரஸ்', 'தேவி', 'மாலை மலர்', 'மக்கள் குரல்' போன்றவை கடுமையாகத் தாக்கியிருந்தன. சிலர் என்னையும், ஷங்கரையும் பாஸ்போர்ட் கொடுத்து, நாடு கடத்தவேண்டும் அல்லது, பாஸ்போர்ட் இருந்தால் பிடுங்கிக்கொள்ள வேண்டும் என்கிற ரேஞ்சுக்கு எழுதியிருந்தார்கள். இருவரும் அரபு தேசங்களில் போல, நகர நடுவில் மண்டிபோட வைத்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருவர் எழுதியிருந்ததாக தகவல் சொன்னார்கள்.
'குமுதம்', 'ஹிந்து', 'குங்குமம்', 'தினத்தந்தி'¢ போன்ற பத்திரிகைகள் அவ்வளவு கடுமையாகத் தாக்கவில்லை. இவர்கள் அனைவரும், 'சுஜாதா சார்! நீங்களுமா? இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?' என்கிற குரலில் விமர்¢சித்திருக்கிறார்கள். தாய்மார்கள், சின்னப் பெண்களுக்கு பூச்சாண்டி காட்ட, 'சுஜாதா சார் கிட்ட சொல்லிடுவேன்! சாப்பிடு' என்று அதட்ட ஆரம்பித்தார்கள். திருமதி ஒய்¢ஜிபி தன் பள்ளியில், ''ஒரு பேரண்ட்¢ சொன்னார். என்ன, ப்ரெஸ்¢ட் எல்லாம் தடவறாளாமே அந்த பிக்சர்ல! ஏன் இப்படி எழுதியிருக்கேள்'' என்று கேட்டார். 'பிரம்ம சூத்திரம் விளக்கம் தந்து, வானமாமலை ஜீயருக்கு வரவேற்புரை அளித்த நீங்களா, இப்படி! உமக்கு பார்த் கலாசார் விருதெல்லாம் கொடுத்தேனே! நான் நம்பவில்லை. எல்லாம் ஷங்கர் சொல்லிக் கொடுத்து அப்படி எழுதினேன்னு சொல்லிடுங்களேன்' என்று பரிந்துரைத்தார். நான், 'அது நியாயம். இல்லை. எழுதிய எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்' என்றேன். பாரத் கலாசார் எனக்கு கொடுத்த விருது வாபஸ் வாங்கப்படலாம்.
நாடார் சங்கங்கள், திரு.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்றவர்கள் பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தனர். ஜனநாயக மாதர் சங்கம் தேவி தியேட்டர் முன் மறியல் நடத்தி, 'படத்தைத் தடை செய்யவேண்டும்' என்று குரல் கொடுத்தார்கள். ஜனநாயக பாலர் சங்கம் என்றிருந்தால் அவர்களும் ஊர்வலம் சென்றிருப்பார்கள். தினம் தினம் ஏதேனும் ஒருசங்கம், இன்றைய தினம் என்ன நடவடிக்கை என்று கேள்வி வந்த உடனே, 'ஐட்டம் நம்பர் 1: பாய்ஸ் படத்துக்கு எதிர்ப்பு. நம்பர் 2: மழை நீர் சேமிப்பு திட்டம்' என்று தீர்மானித்தனர். மேற்கு மாம்பலம் பயனீட்டாளர்கள் சங்கம், அயோத்தி மண்டபம் ஆஸ்¢திக சமாஜம், பூந்தமல்லி ஹைரோடில் உள்ள பல மாடிக் கட்டிடங்களின் வெல்ஃபேர் அசோசியேஷன், பசுவதை தடுப்பு சங்கம் போன்றவையும் பாய்ஸ் படத்திற்கு எதிர்ப்புக்குரல் தெரிவிக்க முன்வந்துள்ளன. மாதாந்திர சிறு பத்திரிகைகள் பேனாவைத் தீட்டி வைத்துக்கொண்டு 'பாய்ஸ் - கலாசார சீரழிவின் ஒரு வெளிப்பாடு' என்று டெரிடாவின் மேற்கோள்களுடன் அடுத்த மாத ஆரம்பத்துக்குக் காத்திருக்கின்றன. இத்தனை எதிர்ப்புக்கு என்ன காரணம் என்பதை கொஞ்சம் அலசிப் பார்ப்பது எனக்கு சுவாரசியமாக இருக்கிறது. படம், ஆந்திரபிரதேசில் ஆரவாரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி என்றால் - சங்க காலத்திலிருந்து உள்ள நம் மக்களின் இரட்டைத் தகுதரங்களைத்தான் காரணம் சொல்லலாம். Double standard. 'பாய்ஸ்' படம் 15 வயதிலிருந்து 25 வயதுவரை தனியாகப் பார்க்கும் இளைஞர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் விதிவிலக்கில்லாமல் சங்கடப்படுத்தியுள்ளது. மனைவிகள் - தங்கள் கணவர்கள், தம்மை மணந்து கொள்ளுமுன் அன்றலர்ந்த புஷ்பம் போல, பாலிதீன் உரை பிரிக்காமல் வந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க, அவர்களுக்கு இந்தப் படத்தில் காட்டியது மாதிரியான இளமைக் காலம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் சங்கடப்படுத்தியுள்ளது. அதேபோல், கணவன்மார்கள். தற்போது டை கட்டிக்கொண்டு, டிபன் பாக்சில் எலுமிச்சை சாதம் எடுத்துக்கொண்டு, ஸ்¢¢கூட்டரில் புறப்படுமுன் குழந்தை விகேஷ§க்கு டாட்டா காட்டிவிட்டு, மனைவியை வாத்சல்யத்துடன் பார்த்துக்கொண்டு ஆபீஸ் செல்லும் கணவர்களுக்கு கடந்த காலத்தில் செய்த தப்புக்கள் சிலவற்றை நினைவுபடுத்துகிறது. 'ஏங்க, இந்த மாதிரித்தான் நீங்கள்லாமா? இப்படித்தான் இருந்தீங்களா?' என்ற கேள்வி வரும். அதற்கு பொய் தயாரிக்க வேண்டும் என்று சங்கடப்படுத்துவதால் அவசர அவசரமாக 'படமா இது? சே! எவன் பார்ப்பான்? என்ன ஆச்சு! இந்த ஷங்கருக்கும், சுஜாதாவுக்கும்' என்று திட்டிவிடுவது பத்திரமானது. தாய்மார்கள் - பகலில் கல்லூரிக்குச் செல்லும், இரவில் கம்பைன்டு ஸ்¢டடிக்கு செல்லும் தம் பிள்ளைகள் துடைத்துவிட்ட வெண்பனிபோல சுத்தமானவர்கள்.... 'என் பிள்ளை/பெண் இப்படியெல்லாம் கிடையாது' என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் அதிர்ச்சி! வயதானவர்கள் - தற்போது உயர் அந்தஸ்திலும், பொறுப்பிலும் இருப்பவர்கள் பழசெல்லாம் மறந்துவிட்டு - சத் சங்கமோ, ஹிந்துவின் பக்தி பக்கமோ, இலக்கியக் கூட்டங்களோ, மாக்ஸ்முல்லரோ, அல்லையன்ஸோ, ஜட்ஜோ, வக்கீலோ, ஆசிரியரோ போன்ற அறிவுஜீவி நடவடிக்கைகளில் நிம்மதியாக இருக்கும் நிலையில் சின்ன வயசு ஞாபகங்கள் எதுவும் வேண்டாம் என்கிறார்கள். இப்படி எல்லா வயதினரையும் சங்கடப்படுத்தியுள்ளது இந்த படம். அமெரிக்கன் ப்யூட்டி, அமெரிக்கன் பை, பல்ப் ஃபிக்ஷன் போன்ற படங்கள் எல்லாவற்றையும் அனுமதிக்கும் மேலை நாட்டு ஆடியன்சையே ஒருகலக்கு கலக்கினது போல, தமிழ்நாட்டை இந்தப் படம் கலக்கியிருக்கிறது. இதனால், 'இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது, பார்க்கலாம்!' என்று மக்கள் ஆதரவும், கூட்டமும் அதிகரித்திருப்பது வேறு விஷயம். இதே படத்தின் ஒவ்வொரு வசனமும், பாடலும் நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆந்திராவில் வெளியான 'பாய்ஸ்' எந்தவித எதிர்ப்பையும், மறுப்பையும் ஏற்படுத்தவில்லை. இதை நிதானமாக யோசிக்கையில், படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் பிரபலம்தான் முக்கியக் காரணம் என்பது எளிதாக விளங்கும். சுஜாதாவோ, ஷங்கரோ, ஏன் ரத்னமோ கூட ஆந்திராவில் அத்தனை பிரபலமானவர்கள் அல்ல. மேலும், தமிழ்நாட்டின் வினோத கலாசாரக் குழப்பத்தால் - சிலர்தான், சில விஷயங்களைத்தான், சிலவகையில்தான் சொல்ல முடியும். சைக்கிளில் பிரமாதமாக ஓட்டிக்காட்டி, விழுந்து முழங்கால் சிராய்ப்பதைச் சொல்லலாம். மாஸ்டர்பேஷனை, ஷங்கர் சொல்லக்கூடாது, டாக்டர் மாத்ருபூதம் ராத்திரி பத்து மணிக்குமேல் சொல்லலாம். வெளிப்படையான செக்ஸ் காட்சிகள், பெண் பெண்ணையே முத்தமிடும் காட்சிகள் பத்திரிகைகளில்¢ வரலாம். படங்களில் வரக்கூடாது. இந்த வாதம் ஒருவகையில் நியாயமே! பத்திரிகை படிக்கிறவர்கள், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். சினிமா பார்ப்பவர்கள் எல்லாரும் அப்படியில்லை. மிகவும் அடிப்படையாகப் பார்த்தால் - தமிழ் சினிமாவின் ஆடியன்ஸ் amorphous வடிவற்றது என்பதாலும், தமிழர்களுக்கு ஏகப்பட்ட conscience keepers மனச்சாட்சி பாதுகாவலர்கள் இருப்பதன் விளைவுதான் 'பாய்ஸ்'க்கு ஏற்பட்ட இத்தனை பெரிய எதிர்ப்பு. 'ஃபயர்', 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர்', 'மான்சூன் வெட்டிங்' அண்மையில் வெளிவந்த 'ஜாகர்ஸ் பார்க்' (அறுபது வயசை இருபது வயசுப்பெண் காதலிப்பது), ரூல்ஸ் (பள்ளிச்சிறுவன் மாடலைக் காதலிப்பது) போன்ற இந்திப் படங்களின் ஆடியன்ஸ்¢ யார் என்பது தௌ¤வான விஷயம் - ஆங்கிலம் தெரிந்த மேல், நடுத்தர வர்க்க இந்தியர்கள். தமிழ் சினிமாவின் ஆடியன்ஸ் என்று பார்த்தால் - மெரினாக் கூட்டங்களையும், வால்மீகி மண்டபங்களையும், ஐயப்பன் பஜனைகளையும், அறுபத்துமூவர், பிள்ளையார் ஊர்வலங்களையும், டிஸ்¢கோக்களையும், ஆட்டோக்களையும், டோயோட்டாக்களையும், கையேந்தி பவன்களையும், டாஜ் ஓட்டல்களையும் நிரப்பும் அத்தனை பேரையும் வளைத்துப்போட்டு, இருட்டில் உட்கார வைத்து படம் காட்ட வேண்டிய அவசியம் இருப்பதால்தான் எந்தப் படம் ஏற்கப்படும், எது தாக்கப்படும் என்பது தௌ¤வில்லாமல் இருக்கிறது.
ஷங்கருக்கு நான் இதுவரை மூன்று படம் எழுதிவிட்டேன். மூன்றும் மூன்றுவித அனுபவங்கள். மூன்றிலும் ஏதோ ஒருவிதத்தில் பிரச்னை வந்தது. 'இந்தியன்' படத்தில் சென்சார் அதிகாரி (அப்போது, ஞான ராஜசேகரன்), 'படத்தில் நிர்வாணக்காட்சி வருகிறதாகச் சொல்கிறார்கள்' என்று சுகன்யா கொடுத்த புகாரை விசாரிக்க, அந்த துணி உருவும் போராட்டத்திற்கு சரித்திர ஆதாரம் கேட்டதால், மஜும்தாரின் சரித்திர புத்தகத்துடன் சாஸ்திரிபவனில் காத்திருந்தது நினைவுக்கு வருகிறது. 'முதல்வன்' படத்தில் காட்டப்பட்ட முதல்வர், தோற்றத்தில் லல்லுபிரசாதைப்போல் இருந்தாலும், திருக்குறள் மேற்கோள் காட்டினதால் கலைஞருடன் ஒப்பிட்டு, மதுரையில் பெரிய போராட்டம் நடந்து சில தினங்களில் அலுத்துப்போய், அடங்கிவிட்டது. இப்போது 'பாய்ஸ்'. இந்த மூன்றுக்கும் பொதுவான விஷயங்கள் இரண்டுதான் - ஷங்கரும், நானும். மணியோசை கேட்கும் என்று எண்ணுகிறேன்.
எனக்கு மெயில் அனுப்பியவர்கள், 'எப்படி ஒருபக்கம் நீங்கள் ப்ரம்மசூத்ரத்துக்கு விளக்கம் எழுதுகிறீர்கள்! மற்றொரு பக்கம், பாய்ஸ§க்கும் வசனம் எழுதுகிறீர்கள்! எது பாசாங்கு? எது நிஜம்?' என்று கேட்டிருக்கிறார்கள். இரண்டுமே நிஜம். எனக்கு கிடைத்த திறமை, அன்றாடம் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்கள் சிந்தனையையும், பேச்சையும், வழக்குகளையும், புதிய வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனித்து எழுதுவது, மனதில் வாங்கிக்கொள்வது. Entering the skin of characters என்பது எழுத்தாளனுக்கு பெரிய சவால். இக்கால இளைஞர்களின் 'ஜெர்க்' விடுவதையும், 'பீட்டர்'களையும், 'ஓடி எம்பி அடிப்பதையும், மங்களம் பாடுவதையும் கவனித்து எழுத ஒரு அவகாசம் ஏற்பட்டது. அதனால், நான் எப்போதும் அந்த பாஷைதான் பேசுகிறேன் என்று எண்ணிக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். பிரம்ம சூத்திரமும் எழுதுவேன். பாய்ஸ்ஸ§ம் எழுதுவேன். என் உள்மனதில் எந்த முரண்பாடும் இல்லை. நான் ஓர் எழுத்தாளன்.கேரளா, குமாரக்கோமில் 'பாய்ஸ்' கதை டிஸ்கஷன், ஸ்க்ரிப்ட்¢ முடித்த உடனே, 2001 டிசம்பர் மாதத்தில், 'பாய்ஸ் - வரப்போகும் விமர்சனம்' என்று ஷங்கரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். இது, டிசம்பர் 2001ல். ஏப்ரல் 2002ல்தான் படப்பிடிப்பே துவங்கியது. இப்போது படம் வெளிவந்தபின் அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. How Predictable! அந்த விமர்சனத்தை, சந்தடியெல்லாம் அடங்கியபின் வெளியிடுகிறேன்.
- சுஜாதா
நன்றி: அம்பலம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->