06-09-2005, 06:47 AM
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்; ஓமல்பே சோபித்த தேரரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாம்
09 -06-2005
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/06/20050608140102fast.jpg' border='0' alt='user posted image'>
சாகும்வரை உண்ணாவிரதம் அனு;டித்துவரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித்த தேரரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித்த தேரருடன் மேலும் 8 பேர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் நீராகாரம் மாத்திரம் அருந்தி வரும் தேரரின் உடல் நிலையை மருத்துவர்கள் சோதனையிட்டதாகவும்,
தற்பொழுது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தேசிய பிக்குகள் முன்னணியினர் நேற்றைய தினம் கொழும்பு, கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
காலை சுமார் 11.45 மணியளவில் ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேசிய பிக்குகள் முன்னணயைச் சேர்ந்த ஏழு பிக்குமார் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்