Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாடாளுமன்றில் அமளி துமளி!
#1
திருமலையில் படையினரை விலக்கக் கோரி நேற்றும் நாடாளுமன்றில் அமளி துமளி!
09-06-2005

(நமது நிருபர்)
திருமலை மாவட்டத்திலிருந்து படையினரை விலக்கிக் கொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசு உரிய பதிலளிக்கத் தவறியதை அடுத்து நேற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடிய போது திருமலை படைக்குவிப்பு விவகாரம் தொடர்பாக பிரதி அமைச்சர் டிலான் பெரேரா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதனை ஏற்க மறுத்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய பதில் வழங்குமாறு கோசம் எழுப்பினர். அத்துடன் திருமலைச் சம்பவங்களின் பின்னணியில் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த செயற்படுவதாக தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் குற்றம் சாட்டியதால் இரு தரப்புக்குமிடையில் கடும் வாதப்பிரதி வாதம் நடந்தது.

இதனையடுத்து பிரதி அமைச்சர் டிலான் பெரேரா ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசியதைத் தொடர்ந்து படைகளை கட்டம் கட்டமாக விலக்குவதெனவும் இது விடயம் பற்றி கூட்டமைப்பை ஜனாதிபதி சந்தித்து பேசவிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பினர் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டனர்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Reply


Messages In This Thread
நாடாளுமன்றில் அமளி துமளி! - by hari - 06-09-2005, 06:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)