06-09-2005, 06:32 AM
Nilavan Wrote:பழம்பெருமை பேசுவது ஒன்றும் பிழையல்ல... ஆனால் தற்பெருமை பேசுவதே பிழை!
யூட் எதோ சொன்ன மாதரி இருந்தது. தமிழருக்கு கவரிமான் மானமோ அதோ இதோ என்று . மானத்தை பற்றி மானமுள்ளவர்கள் பேச வேண்டும்...[/
இதைச் சொன்னவர், நான் முதல் எழுதியபடி, மறைந்த உளவியலாளர் டாக்ரர் செல்வக்கோன். அவர் உயிரோடு இருந்த காலத்தில் கனடாவின் வன்கூவர் பகுதியில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக இயங்கினார். கனடா வந்து உளவியலில் கலாநிதி பட்டம் பெற்று உழைத்து வாழ்ந்த மானமுள்ள மனிதர் அவர். அவரது பெண்பிள்ளைகள் தற்போது மருத்துவர்களாக படித்து வன்னி சென்று சேவையாற்றி திரும்பி வந்திருக்கிறார்கள்.
Quote: மானத்தை பற்றி மானமுள்ளவர்கள் பேச வேண்டும்...கருத்துக்களை கருத்துக்களால் வாதிடுவதை விடுத்து சண்டைக்கு நிற்கும் முட்டாள்கள், அவர்கள் தமிழர்களாக இருந்தால் முட்டாள் தமிழர்கள்.
Quote: மாற்றானின் காலில் விழுந்தாவது காரியம் சாதிக்க வேண்டம என்று எண்ணுபவர்கள் தமிழர்களும் இல்லை தன் மான மனிதர்களும் இல்லை.
நிலவன்
மாற்றானின் காலில் விழுந்து அகதிப்பிச்சை கேட்ட தமிழர்கள், என்ற காரணத்துக்காக எமது மக்களை இப்படி "தமிழர்கள் இல்லை" என்று எழுதலாமா? உண்மைதான் எமது மக்களின் சூழ்நிலை அந்நியன் காலில் விழ வைத்து விட்டது. அதற்காக எமது மக்களை இப்படி "தமிழர்கள் இல்லை" . என்று சொல்லாதீர்கள். அப்படி சொல்லும் உரிமையும் உங்களுக்கு இல்லை.
மாற்றான் என்பதிலும் பார்க்க, மோசமான எதிரியாக எத்தனையோ தமிழர்களை மோசமான சித்திரவதைகளால் கொன்று குவித்தது சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும். இவ்வளவு மோசமாக எதிரிக்கு கைலாகு கொடுத்து வரவேற்று, ஒரு புன்சிரிப்புடன், இருக்க நாற்காலி கொடுத்து சிற்றூண்டியும் கொடுத்து பேசும் விடுதலைப்புலிகளை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
எத்தனையோ விடுதலைப்புலிகளை கொன்று குவித்த சிறிலங்கா இராணுவத்திடம் போக்குவரத்துக்கு ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் பாதுகாப்பு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/07/Thamilselvan_Batti_1.jpg' border='0' alt='user posted image'>
<b> சிறிலங்கா இராணுவ ஹெலிக்கொப்ரரில் வந்திறங்கும் விடுதலைபபுலிகளின் பேச்சாளர் தமிழ்ச்சசெல்வன். </b>
இப்படி மாற்றறானிடம் இறங்கிப் போவதற்காக அவர்களை "மானமற்ற தமிழர்கள்" என்று சொல்லலாமா? இதைத்தான் டாக்டர் செல்வக்கோன் சீனர்கள் பொதுவாக இவ்வாறு செயற்படுவதாகவும், தமிழர்கள் நிலவன் வழியில், "இவன் மாற்றான், விடு, மண்டையை உடைக்கிறேன்" என்று அடிதடிக்கு போய் காரியத்தை கெடுக்கும் போக்கை கொண்டிருக்கிறோம், என்றும் சொன்னார். விடுதலைப்புலிகள் மோசமான எதிரியிடமே பாதுகாப்பு கேட்குமளவுக்கு இற்ங்கிப்போனதற்கு பெயர் இராஜதந்திரம். முட்டாள்களுக்கு இது "மாற்றானின் காலில் விழுவதாக" தெரியும். இது கொலைகாரன் இராஜிவுக்கு போட்ட மாலை போல. காலில் விழுவது காலை வாரிவீடுவதற்கேயன்றி அப்படியே கிடப்பதற்கல்ல. இவன் "மாற்றான் இவன் காலில் வழுவதா" என்று நிற்கும் தமிழனின் முட்டாள்தனத்தை தான் டாக்ரர் செல்வக்கோன் சீனர்களுடன் ஒப்பிட்டு விளக்கினார். விடுதலைப்புலிகள் நிலவன் போல் இல்லாமல், மாற்றானின் காலில் விழுவது போல் விழுந்து காரியம் சாதிக்கும், தலைக்கனமற்ற மனப்பக்குவத்தையும், பொறுமையையும், அறிவுடைமையையும் கொண்டிருப்பது பற்றி நாம் பெருமைப்பட வேண்டும்.

