06-08-2005, 09:25 PM
Quote:வெண்ணிலாக்கா தாலி கட்டாதவை மந்திரம் ஊதாமல் கல்யாணங்கட்டினவ சந்தொசமா இல்லையே? நித்திலாக்கா தாலி கட்டுறத தான் உங்கட அடையாளமெண்டால் பொம்பிளையள் வெளிநாட்டில சீலை கட்டிக்கொண்டு போங்கவன். ஆம்பிளயள் வேட்டி கட்டிக்கொண்டு போங்களன். சரி குளிர்காலத்தில கஸ்ரமெண்டால் வெயில் காலத்தில செய்யலாந்தானே? நிறைய எங்கட அடையாளங்கள் அடுக்கிக் கிடக்குது அதுகளயும் செய்யுங்கோவன் அர்த்தம் இல்லாத சடங்குகள செய்யோணுமெண்டு சொல்லேல எண்டு சொல்லுறீங்கள் அப்ப தாலி கட்டுறத அர்த்தமான சடங்கு மந்திரம் ஊதுறது அர்த்தமான சடங்கெண்டால் அதில என்ன அர்த்தமிருக்கக்காமிஸ் பூனைக்குட்டி.. சாறி உடுத்து போகின்ற..தமிழ் ஆடை அணிந்து திரிபவர்களை புலத்தில் கண்டதில்லையோ..?? இன்னும் வெஸ்டேன் ஆடை அணியாத பெண்களை நாங்கள் லண்டன்ல கண்டிருக்கம். அது அது அவரவர் விருப்பம் இதற்கு குளிர் ஒரு தடையல்ல. புலம்பெயர்ந்து தமிழர்கள் மட்டும் வாழவில்லை எத்தனை எத்தனை காரணங்களிற்காக முஸ்லீங்களும் இடம் மாறியிருக்கிறார்கள். அவர்கள் குருதா போட மறக்கிறார்களா..?? எத்தனை இந்திய பாகிஸ்தான் பெண்கள் சாறி உடுத்திறார்கள் குளிர் மழை என்று பார்க்காமல். அப்படி அணிகிற ஆண்கள் கூட இருக்கிறார்கள். அவர்களால் மாறாமல்் வாழ முடிகிறது. தங்கட கலாச்சாரத்தை அடையாளத்தை பேணமுடிகிறது ஏன் தமிழரால் முடியாது நாங்களா எல்லாத்திக்கையும் நுழைகிறம். எங்கட அடையாளத்தை காக்கவேணும் என்று நினைச்சால் எதுவும் பொருட்டாய் அமையாது. ஆனால் வசதிக்கேற்ப பலர் ஆடை அணிகிறார்கள் அதற்காகக அவர்களால் தமிழ் உடை உடுத்தவே முடியாது என்பதா அர்த்தம்.
_________________
முன்னைய காலத்தில் தாலியை வெறும் எளிமையாய் வைத்திருந்தார்கள் எல்லாரும் அதை பயன்படுத்தக்கூடியவாறு.. இப்ப தாலி என்கிறது எப்படி மாறியிருக்கு.. பவுனில நிக்குது.. 45.. 50 அதை பாதுகாக்கிறதே பெரிய வேலையாய்ப்போச்சு. இப்படி மாறிய தால தான் தாலியின் புனிதம் அறியாமல் திரியிறார்கள். என்ன பண்ண காலமோ..
தாலி என்பது ஒரு அடையாளம் உண்மையில் அர்த்தமுள்ள அடையாளம். அன்பின் அடையாளமாய் நாங்க பாக்கிறம். அது தானே.. உண்மை ஒரு ஆணும் பெண்ணும் நம்பிக்கையின் பால் சேர்ந்து வாழலாம்.. தாலி நம்பிக்கையை அதிகரிக்கும்.. இன்னொன்று சமூகத்திற்கும் எங்கட நம்பிக்கையை சொல்றதுக்கு இந்த தாலி ஒரு சாதனமாய் பாருங்கள். முன்னைய காலங்களில் பலவற்றை விளக்கிறதுக்கு இந்த தாலியைப்பயன்படுத்தினார்கள். இப்ப தாலி பெண்கள் மட்டும் போடுறது கஸ்டமாய் இருந்தால் ஆண்களையும் போடவையுங்கள் அதற்காக அதை தேவையற்றது என்பதில் என்ன நியாயம். தாலி பெண்களும் மெட்டி ஆண்களும் அணிகிற வழக்கம் இருந்து மருவி இரண்டையும் பெண்கள் அணியும் நிலை வந்திட்டுது. திருமணம் ஆன ஒருவரை அடையாளம் காட்டி அதற்கு புனிதம் கொடுப்பது தாலி. போற போக்கில.. நம்பிக்கையில வாழுவம் ஏன் பதிவுத்திருமணம் என்று கேப்பியள்.. அப்புறம்.. விலங்குகளாட்டம். அலையலாம் பாத்திருங்கள்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

