06-08-2005, 08:40 PM
Quote:கொமுனிசம் எண்டால் என்னவொ தேசியம் எண்டால் என்னவோ தமிழீழ விடுதலைப்போராட்டமெண்டால் என்னவோ கியூமனிசமெண்டால் என்னவோ அதமாதிரித்தான் உதுவுமக்கா. ஆனா பெண்ணியமெண்டுறதொண்டும் தனியான விசயமில்ல அது கியூமனிசத்தின்ர ஒரு பகுதிதானக்கா. இப்ப சமூகமெண்டால் என்ன? ஆண்கள் பெண்கள் பிறகு குழந்தையள் இளையர்கள் வயசுபோனவை எண்டுறதெல்லாம் அடங்குதுதானே அதமாதிரி கியுமனிசத்துக்குள்ள பெண்ணியமும் அடங்குதக்கா. கியூமனிசம் என்னெண்டு விளங்கிச்சுதெண்டால் பெண்ணியத்தையும் விளங்கலாமக்கா. இப்ப புலியளில கரும்புலியள் கடற்கரும்புலியள் வான்புலியள் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு மகளிர் படைப்பரிவு மாதிரித்தானக்கா. ஏன் கடற்புலியெண்டு நீங்கள் கேக்கலாமக்கா. அவையின்ர சூழ்நிலை வேறக்கா அவை சண்டை பிடிக்கிறதுக்கு அவைக்கு வான்புலியள விட வேற தகுதியள் வேணுமக்கா. இதுகள விளங்கிட்டுது எண்டால் பெண்ணியமெண்டுறத விளங்கலாம். பெண்ணியமெண்டுறது பெண்ணியமில்லக்கா. மனுச விடுதலை பெண்விடுதலை தனி மனுச சுதந்திரமெண்டு கனக்கவா அத பாக்குலாம். அதால பெண்ணிசம் எண்டுறது பெண்ணிசம் இல்லக்கா மற்ற அண்ணாக்களையும் அக்காக்களையும் கேளுங்கக்கா
என்ன பூனைக்குட்டி பெண்ணியத்திற்கு அறுக்கப்பட்ட வரையறை கிடையாதா என்ன..?? இப்படி பலவற்றை காட்டிறியள்.
கியூமனிசத்திற்க பெண்ணியம் அடக்கம் என்றால்..?? கியூமனிசத்திற்காகக போராடலாமே (பேசலாமே) ஏன் பெண்ணிய
த்தை மட்டும் பிரிச்சு பேசிறார்கள். ஆக மொத்தத்தில ஒரு சிறந்த வரையறை கொடுக்க முடியாத நிலையில இருக்கிறது பெண்ணியம் அப்படியா..?? இல்ல உங்கட பெண்ணியத்தை போராடட்டத்தோட ஒப்பிடிறியள் நல்லாய் இருக்கு.. யாரும் பேசல சந்தோசம் தான்.
ஏன்ன பூனைக்குட்டி வான்புலி தரைப்புலி கடற்புலி எல்லாம். புலியலுக்க நிக்குது சரி நின்று ஒற்றுமையா போராடுது சரி. அதென்ன பெண்ணியம் மட்டும் கியூமனிசத்தை விட்டு தனியா வந்து போராடுது..?? ஏன் தனியாப்போகுது. கியூமன்ஸ்ல இருந்து வேறு பட்டவையோ பெண்கள் அல்லது பெண்ணிய வாதிகள். தனி மனிச சுதந்திரத்தை பெண்ணியம் பேசித்தான் கொடுக்க முடியுமாங்க.
பெண்ணியம் பேசி என்னத்தை சாதிச்சாங்க.. இலக்கை அடைஞ்சீங்க.. பூனைக்குட்டி பெண்ணியம் அப்படியிருக்கும்இப்படியிருக்கும் அது போல இது போல என்றதை விட்டிட்டு சரியான வரைவிலக்கணம் சொல்லுங்க. சின்னப்பிள்ளைகள் கேக்க காத்திருக்கம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

