06-08-2005, 08:16 PM
சரி முட்டாள்களாகவே இருக்கிறோம். ஆனால் எதற்கு நீங்கள் கோவப்படுகிறீர்கள்? இந்து மதம் கோவத்தை அடக்க இந்துமதம் கற்றுத்தரவில்லையா? சரி. அதைவிடுவோம்.
இந்துமதம் சொன்ன நல்ல வழிகளில் நடக்கிறீர்களா என்று நீங்கள் என்னைப் பார்த்துக் கேட்டீர்களா அல்லது பொதுவாக கேட்டீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்துமதம் சொன்ன நல்ல வழிப்படி மக்கள் நடக்கிறார்களா என்பது தானே பிரச்சினை. இந்து மதத்தில் குறைபாடுகள் உள்ளதை ஒத்துக்கொள்கின் நீங்கள், அந்தக் குறைபாடுகளையும் முட்டாள்தனங்களைளயும் தான் மக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள்தானே?
தமிழரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மொழியையும் இந்து சமயம் காத்துநின்றது என்று நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. மாறாக தமிழரின் பண்பபாட்டைச் சிதைத்தும் பாரம்பர்யத்தை ஒழித்தும் மொழிமீது ஆதிக்கம் செலுத்தியும் தான் வந்துள்ளது. தமிழரைத் தன்நிலை உணராது ஆதிக்கப் பிடிக்குள் வைத்திருந்துள்ளது, வைத்துள்ளது. போலி மாயைக்குள் சிக்குண்டு சிந்திக்கவிடாமல் முடக்குகிறது.
இந்துசமயம் சொன்ன வழியில் தான் நாம் நடக்கவேண்டும் என்பதில்லை. நமக்கும் நமது சமூக முன்னேற்றத்திற்கும் எது சரியானதாக பயனுள்ளதாக அமைகிறதோ அதன்படி நடந்தால் போதுமானது.
மதத்தினால் மனிதனை மிருகமாக்கவே முடிந்துள்ளது!
மனிதனை மனிதனாக வாழவைக்க முடியவில்லை.
மானுடவிடுதலை என்பது மதமெனும் போலி மாயைக்குள்ளிருந்து விடுபடும்பொழுதே சாத்தியமாகிறது.
இன்றைய தென்னிந்தியப் போலித் தமிழ்ச் சினிமா போன்றதுதான் மதம். அல்லது உங்கள் கருத்துப்படியே மக்கள் பார்வைக்குப்படுகின்ற மதம். தென்னிந்தியப் போலிச் சினிமா எப்படி Heroism தனை மையமாகக் கொண்டுள்ளதோ அதேபோன்றுதான் இந்துமதத்தின் கடவுளர்கள். எப்படி தனிமனித வழிபாடுகளையும் இரசிகர் மன்றங்களையும் தென்னிந்திய சினிமாக் குப்பை உருவாக்குகிறதோ அதையே தான் இந்துமதமும் செய்கிறது. கீழ்மட்ட இரசிகர்களின் வியர்வைத்துளிகளில் நடிகர்கள் எப்படி குளிர்காய்கிறார்களோ அதேபோன்றுதான் இந்துமதக் கோவில்களும் கடவுள்களும். தென்னிந்தியசினிமா ஈழத்தமிழர் போராட்டத்தை எப்படிக் கொச்சைப்படுத்துகிறதோ அதையே தான் இந்துமதம் சூத்திரர்கள் என்கிற பெயரில் மக்களைக் கொச்சைப்படுத்தியது. படுத்துகிறது.
மனிதனை நல்வழிப்படுத்துகிற மதமாயின் அது Heroism(கடவுள்) இல்லாத மதமாக இருக்கவேண்டும். எந்த சமூகக்கோட்பாடும் தனிமனித வழிபாட்டை மையமாக வைத்து பிறக்கவும் கூடாது, காண்பிக்கப்படவும் கூடாது. ஒரு நல்ல சமூகக் கோட்பாடு என்பது சமூகத்தோடு சமூகமாக சமூகத்தின் வியர்வைத்துளியாக சமூகத்துள்ளிருந்து பிறக்கவேண்டும்.