06-08-2005, 05:15 PM
எங்கள் சமூகத்தில் இருக்கும் முட்டாள் தனங்களை களைய முயற்ச்சி செய்யுங்கள் அதை விடுத்த தேவையில்லாமல் மதங்களை குறை சொல்லாதீர்கள். எதுவுமே உண்மையில்லை என்பத உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஆனால்....நீங்கள் ஒன்றை இப்போது எமதுக்கு புரியவைத்துள்ளீர்கள் அதாவது இந்து சமயம் வளர்வதில் எங்களுகிடையே இருக்கும் சில தீய சக்திகளுக்கு இஸ்டமில்லை. 10000 டொலரும் நல்ல வேலைவாய்ப்பும் வீடு வளவும் கோட்டும் சூட்டும் கொடுக்கும் யேகோவாவின் சட்சிகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்காது தடைகளின்றி இருக்கக விடுவது இந்து மதம். உங்களுக்கோ அல்லது மேலுள்ள தொடர் கட்டுரையை எழுதியவருக்கோ சமயம் என்பதின் அர்த்தம் புரியவில்லை. நீங்கள் சொன்ன கருத்துக்கள் மேலுள்ள கட்டுரையாளரின் கற்ப்பனையே தவிர வேறெதுவும் இல்லை. அப்படி தான் அவர் உதாரணம் காட்டிய கதைகளும் இவரைப்போன்ற வககிர புத்தி படைத்தவர்களால் இந்து சமயத்தின் பெயரில் பல புனைகதைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை பிரித்துப்பாக்க முடியாதவன் எல்லாம் ஒரு ஆய்வாளர்....எழுத்தாளர்...பெயர் வரவேண்டும் என்பதற்காக கட்டுரை எழுதக்மூடாது. ஒருவன் ஒரு கருத்தை எழுதினாள். அதனால் அவனது சமூகம் பயனடைய வேண்டும் ஒரு விநாடி அவன் அக்கரத்துப்பற்றி சிந்திப்பானாயின் அது கருத்தெழுதியவனுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் நீங்களும் நீங்கள் பிரதி செய்து போட்ட கட்டுரை எழுத்தாளரும் உங்கள் பெயர்கள் மெலெழவேண்டும் என்று தான் சிந்திக்கின்றீர்கள். அதை விடுத்து ஆக்க பூர்வமான கருத்துக்களை தந்தால் என்ன? இந்து சமயத்தில் எத்தனை நல்ல விடையங்கள் இருக்கிறது? அவற்றை பற்றி நீங்கள் ஏன் ஆராயக்கூடாது? ஒரு விமர்சகன் தனது விமர்சனத்தில் முதலில் நல்ல விடையங்கள் பற்றி ஆராயவேண்டும் அது தான் விமர்சனம். வெறும் தீய விடையங்களை பற்றி ஆராய்வத அவரின் வக்கிரப் புத்தியே அன்றி விமர்சனம் அல்ல.
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

