06-08-2005, 09:26 AM
இளைஞன் Wrote:பதிவுத் திருமணம் சரி. மதரீதியான சடங்குகளூடான திருமணம் என்பது எதற்கு?
இங்கே கருத்தாடலுக்குரிய தலைப்பில் தமிழர்கள் என்பதை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். எனவே தமிழர்களான ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என இணையும் போது அவர்களை இணைப்பது தாலி என்ற ஒரு பந்தத்தால் தான். தமிழர்களாகிய ஒவ்வொருவரும் தாலிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என சொல்லிப்புரிய வைக்கத்தேவையில்லை. எனவே தாலியை ஒரு ஆண் ஆனவன் பெண்ணுக்கு அணியும் போது மதரீதியாக சாஸ்திரப்படி கட்டினால் அது நாகரிகமற்ற செயலா? இல்லையே. எனவே திருமணம் என்னும் போது பதிவுத்திருமணமும் தேவை தான் மதரீதியான சடங்குத்திருமணமும் தேவைதான்.
----------

