06-08-2005, 09:09 AM
மதன் அண்ணா சொல்வதையே நானும் ஏற்கிறேன். சட்டத்திற்கு முன் தாங்கள் கணவன் மனைவி என அடையாளம் காட்டுவதற்காகவே பதிவுத்திருமணம் செய்யப்படுகிறது. அதேபோலவே சமுதாயத்திற்கும் தாங்கள் கணவன் மனைவியென அடையாளப்படுத்துவதற்காகவே ஒரு சமயப்பெரியார் முன்னிலையில் சாஸ்திர சடங்கு சம்பிராயப்படி தாலி கட்டி கணவன் மனைவியாக பெற்றோர் சுற்றத்தார் பெரியோர்களின் ஆசியுடன் சந்தோசமாக வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.
----------

