06-07-2005, 10:40 PM
sathiri Wrote:Quote:அண்ணா அளவு பெரியரினால் பிரகாசிக்கமுடியாமல் போனதுக்கு காரணம் (சரியாக ஞாபகமில்லை) 85 வயசென்று நினைக்கிறேன் அந்த வயதில் மிகவும் ஒரு சிறிய பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார். இவ்வளவு கருத்துக்களை வைத்தவருக்கு உடல்ரீதியாக தனக்கும் அந்த பெண்ணுக்கும் பொருத்தம் இருக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளாதது வேதனை.அண்ணாவும் கருனாநிதியும் களவாகனபேரை வைச்சிருந்தினம் பெரியார் பாவம் வயசான காலத்திலை பிடிச்சு நடக்க ஒரு ஆள்தேவையெண்டு மணியம்மையை பிடிச்சார் அதை போய் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம் அண்ணா பற்றி எழுதியதும் தான் ஞாபகம் வருகிறது சாத்திரி. அண்ணா கூட தனது பிள்ளைக்கு சடங்கு ரீதியான திருமணம் நடத்தினார் என்று வாசித்தறிந்த ஞர்பகம். கொள்கைப் பிரச்சாரம் செய்தவர்கள் சிலநேரங்களில் தாமே சில சமரசங்களுக்கு உள்ளாகிப்போகிறார்கள். இதுதான் யதார்த்தம்.
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கூட மதங்களை அனுசரித்து சமரசங்களுக்கு உள்ளாகவேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெளத்த சிங்களப் பெரும் தேசியவாதத்தின் ஆதிக்கப் பிடிக்கெதிராகப் போரிவேண்டுமென்றால் சிறுபான்மையினரை ஒன்றுபடுத்தவேண்டும் - சிறுபான்மை மதத்தினரை பகைப்பதால் வெறுப்பைத்தான் சம்பாதிக்கமுடியும். அதுதவிர அந்நிய நாடுகளின் மதரீதியான எதிர்ப்பிரச்சாரங்களுக்கும் ஆளாகவேண்டும். ஏற்கனவே பெளத்த சிங்களப் பெருந்தேசியத்தை எதிர்த்து போரிடும் தமிழ்த் தேசியம் இந்துத்துவ எதிர்ப்பையும், கிறிஸ்தவ எதிர்ப்பையும் சம்பாதித்தால் மக்கள் ஆதரவை இழக்கவேண்டியிருக்கும். இதன் உண்மை உணர்ந்ததால் தான் விடுதலைப் போராட்டமென்பது மதம் சார்பில் தனது கருவியை நீட்டவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளின் திருமண முறையையே ஓர் உதாரணமாக இங்கே குறிப்பிடலாம். புலிகள் தான் எல்லாவற்றையும் முன்னின்று நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்காமல் சமூக சீர்கேடுகளை, மூடச் சம்பிரதாயச் சடங்குகளைத் தமிழ்ச் சமூகத்திலிருந்து களைய முன்வரவேண்டும். தமிழீழத் தேசிய வீடுதலைப் போராட்டத்தைப் பாதிக்காத எதையும் புலிகளும் எதிர்க்கப் போவதில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->