06-07-2005, 10:36 PM
இளைஞன் Wrote:பிடித்திருக்கிறது என்பதற்காக முட்டாள்தனங்களை அரங்கேற்ற முடியுமா மதன்? பதிவுத் திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன் என்பதை விட அதை செய்யவேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.
உண்மையை சொன்னால் சில சமயங்களில் அரங்கேற்ற வேண்டியிருக்கின்றது, நான் லண்டனில் இருந்து வெகு தூரத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்துகொண்டிருந்த போது அதே விடுதியில் மலேசியாவை சேர்ந்த ஒரு தமிழ் மாணவரும் தங்கியிருந்தார். அவருக்கு ஒரு நாளுக்கு ஒரு முறையாவது சோறு கறி சாப்பிட வேண்டும் இல்லை என்றால் சாப்பிட்ட மாதிரி இருக்காது. அந்த இடத்திலோ தமிழர்களோ இந்தியர்களோ இல்லை என்பதால் தென்னிந்திய சமையல் பொருட்கள் கிடைக்காது, அதனால் அவருக்கு சமையல் பொருட்கள் மலேசியாவில் இருந்து மிகுந்த பணசெலவில் பார்சலாக வரும், அவரும் அதை வைத்து சமைத்து சோறூ கறி சாப்பிடுவார். அந்த நகரத்தில் இருந்த மற்றவர்கள் மேற்கத்தைய உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர்வாழவில்லையா? உயிர்வாழ்வதற்கு தேவை உணவே அன்றி சோறூ இல்லை தானே? ஆனால் அவருக்கு பழகிவிட்டது பிடித்திருக்கின்றது அதனால் செய்கின்றார். இதனால் அவர் செய்வது முட்டாள் தனமாகிவிடாது, அவருடய உணர்வுகள் எனக்கு புரிகின்றன, எது எப்படியோ அவரால் இப்படி செய்தால் சந்தோஷமாக இருக்க முடிகின்றது, இதனால் மற்றவர்களுக்கு அவர் இடையூறு எதையும் தரவில்லையே. அப்படியே இருந்துவிட்டு போக்கட்டுமே. அது போலதான் இதுவும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

