06-07-2005, 10:13 PM
நீங்கள் சொன்ன விடயத்தை உள்வாங்கியதால் தான் பதில் எழுதினேன் வியாசன். மற்றும்படி நீங்கள் "ஏன் கிறிஸ்தவமதத்தை பற்றி சொல்லவில்லை" என்று கேட்டதற்கான பதில் தான் அது. கிருபன் இந்து மதத்தில் உள்ள சீர்கேடுகளைத்தானே இங்கிணைக்கிறார். அவர் அதனால் இன்னொரு மதத்தை உயர்த்துகிறார் என்று ஏன் கருதுகிறீர்கள்? சமுதாய முரண்பாடுகளைக் கையிலெடுப்பவர்களெல்லோரும் சிறந்த எழுத்தாளர்கள் என்று யார் சொன்னார்கள்?
பெரியார் ஊருக்கு உபதேசம் செய்தாரே தனக்கு செய்யேலயோ என்பது வேறு விடயம். அவர் சொன்ன கருத்துக்களில் உண்மையிருக்கிறது என்பதை உணர்ந்தால் சரிதானே? அதற்காக அவர் சொன்னது எல்லாவற்றையும் பின்பற்றவேண்டுமோ ஏற்றுக்கொள்ளவேண்டுமோ என்பதல்ல எனது கருத்து. பெரியாரும் மணியம்மையாரும் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தார்களா? இல்லைத்தானே?
இரமனை நல்லவன் என்று நீங்கள் கருதினால் தமிழ் மன்னன் இரவணனை என்ன சொல்வது? கெட்டவனா? ஏன் இரவணனை கெட்டவனாகக் காண்பிப்பதற்காக இராமன் கதாபாத்திரம் சிறந்ததாகப் புனையப்பட்டிருக்கலாந்தானே? தீயவர்கள் தான் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எப்படி உறுதியாகக் கூறமுடியும்? தம்மைத் தட்டிக்கேட்டவர்களைத் தண்டித்துவிட்டு அவர்களைத் தீயவர்களாக சமூகத்திற்கு காண்பிக்கப் பழிசுமத்தியிருக்கலாந்தானே? இன்றும் கூட நிகழ்கிறதுதானே? எனவே புராணங்கள் மனிதரை நல்வழிப்படுத்தத்தான் உருவாக்கப்பட்டன என்பது அர்த்தமில்லாத வாதமாகவே நான் கருதுகிறேன்.
நிச்சயமாக உங்கள் கருத்தை நீங்கள் எழுதுங்கள் வியாசன்.
குளக்காட்டன்... கிருபனின் கருத்துக்கள் "பெரியாரின் சிந்தனைகள் பகுதி 3" இல் இருந்தே இங்கு தரப்படுகின்றன. கிட்டத்தட்ட இந்த மூன்றாவது பகுதியே ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு பகுதிகள் உள்ளன. கடவுள் பற்றிய கருத்துக்கள் மட்டுமல்லாமல், பெண்விடுதலை, சாதிய அமைப்புகள், பொதுவுடமை போன்று பலவிதமான சிந்தனைகள் சார்ந்த அவருடைய கருத்துக்கள், பத்திரிகைக் கட்டுரைகள், உரைகள் போன்ற அடங்கியுள்ளன.