06-07-2005, 09:40 PM
பிடித்திருக்கிறது என்பதற்காக முட்டாள்தனங்களை அரங்கேற்ற முடியுமா மதன்? பதிவுத் திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன் என்பதை விட அதை செய்யவேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.
தாலி கட்டுறத விடுவம் ஆனால் பிராமணரை அழைப்பது எதற்கு? பணம் கொடுப்பது பிரச்சினையில்லை ஆனால் வேற்றுமொழியில் உங்களுக்கு விளங்காமல் ஒன்றை சொல்லி உங்களுக்குத் திருமணம் செய்விப்பதற்கு யாரவர்? உங்கள் அன்னை தந்தை உறவுகளின் வாழ்த்துக்களுடன் நீங்கள் ஒன்றிணைவது சரி. ஆனால் இந்த பிராமணர்களுக்கு அந்த இடத்தில் என்ன வேலை. அதில்தான் தெளிவுவேண்டும் மதன்.
சடங்குகள் சம்பிரதாங்கள் என்கிற போலி வழக்குகளுக்குள் இருந்து மீறமுடியாத நிலைக்குள்ளாகியிருப்பது கவலைதான். உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு முடியாது. ஆனால் உங்கள் முடிவில் தெளிவு காணுங்கள் என்பது என் அன்பான வேண்டுகோள்.
சிலவேளைகளில் சில விட்டுக்கொடுப்புகளுக்காக நீங்கள் இந்த முடிவை எடுக்கலாம். சிலநேரங்களில் சில சமரசங்களை செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலைகளுக்குள்ளாயிருக்கலாம். எது எப்படியாக இருப்பினும் தனிமனிதனை மாறு என்று சொல்வதை விட, மாற்றத்திற்கான புறச்சூழலை உண்டுபண்ணுவது அவசியம். அல்லது அப்படியான சூழல் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆனால் சமூகப்புரட்சிக்கான புறச்சூழலை உண்டுபண்ணுவதன் மூலம் தனி மனித மனங்களிலும் மாற்றங்களை உண்டுபண்ணலாம் என்பது உண்மை.