06-07-2005, 08:55 PM
[size=13]நிச்சயமாக சேர்ந்து வாழ்த்தல் எப்படி என்பது அவரவர் விருப்பம் தான். அதே போல் நான் எப்படி வாழ வேண்டும் என்பதிலும் எனக்குள் சில எண்ணங்கள் இருக்கின்றன. பதிவு திருமணத்தை நீங்கள் ஏற்றுகொண்டு விட்டிட்டீர்கள் அதனால் அதன் சட்ட ரீதியான அங்கீகாரத்தை அவசியத்தை விளக்க தேவையில்லை. இனி மத ரீதியான திருமணம் குறித்து சொல்கின்றேன். இந்த மத ரீதியான சடங்குகளிற்கு அர்த்தம் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றை ஏற்று அந்த வழியில் திருமணம் செய்ய எனக்கு பிடித்திருக்கின்றது. மிக மிக ஆடம்பரமாக இல்லாமல் ஆனால் அவசியமான உறவுகளையும் நட்பையும் சுற்றத்தையும் அழைத்து ஒரு பிராமணரை வைத்து திருமணம் செய்யலாம். வருபவர்களின் வாழ்த்து மனதிற்கு ஒரு மகிழ்சியை அளிக்கின்றது, ஒரு உறவுகளின் ஒன்று கூடலாக ஒரு இனிய நாளாக அமைக்கலாம் அந்த நாள் அமையலாம் தானே? அந்த ஒரு நாள் ஒரு பிராமணர்க்கு 100 பவுண்ஸ் கொடுப்பதால் நான் எவ்விதத்திலும் குறைந்துவிடமாட்டேன், இவை பகுத்தறிவை வைத்து பார்த்தால் கேலிக்குறியதாக இருக்கலாம் ஆனால் எனக்கு பிடித்திருக்கின்றதே என்ன செய்ய ... எண்ணங்கள் தானே மனிதனை ஆட்டி படைக்கின்றது, எனக்கு(எமக்கு) பிடித்ததை செய்து வாழ்க்கையை அனுபவித்து சுற்றமும் நட்பும் நாமும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அதுவே எனது எண்ணம், இது பிற்போக்காயிருந்தாலென்ன முற்போக்காயிருந்தாலென்ன?
யாரந்த தேவதையா தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன் இளைஞன். உங்களுக்கு சொல்லாமலா?
யாரந்த தேவதையா தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன் இளைஞன். உங்களுக்கு சொல்லாமலா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

