06-07-2005, 08:07 PM
Mathan Wrote:இளைஞன் Wrote:[quote=Mathan]லொள்ளு பண்ணாதீங்க நான் கேட்டது உங்களுக்கு புரியலையா? இதில் எது என்று கேட்டேன்,
1) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்
2) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்
ஈர்ப்பு > நட்போடு பழகல் > நட்பில் புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து வாழ்தல் > நேசித்தல் (காதலித்தல்) எனக்குப் போதுமானதாக நான் கருதுகிறேன். திருமணம் என்பது எனக்கு அவசியம் அற்றதாகப் படுகிறது (அதாவது இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள்).
ஆனால் மதன் நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? திருமணம் செய்தல் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா? அதுவும் சேர்ந்து வாழ்தல் தானே? அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் சட்டங்கள் என்பன அதற்கான அனுமதியாக அமைகின்றன.
காதல் திருமணம்= தானே தன் துணையைத் தேர்ந்தெடுப்பது. (ஏனென்றால் காதலைக் கூட தன்பாட்டுக்கு யாரும் வரவிடுவதில்லை, வலுக்கட்டாயமாக நீ என்னைக் காதலி நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பது தான் இன்று அதிகம் நடக்கிறது)
பேசிச் செய்தல் = பெற்றோரால் (உறவுகளால்) தேர்ந்தெடுக்கப்பட்டு (அதன் பின் பிடித்திருந்தால்) மணமுடித்தல்.
சரி பிறகு வந்து மிகுதியை எழுதுகிறேன். சரியா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>பதிலுக்கு நன்றிகள் இளைஞன். என்னை பொறுத்தவரை ஈர்ப்பு மிக அவசியம். அந்த ஈர்ப்பு ஏன் எப்படி ஒருவர் மேல் ஏற்படுகின்றது என்பதற்கு காரணம் சொல்ல முடியாது. அது ஏற்பட வருடங்களோ மாதங்களோ அவசியமில்லை .... நம்மை அறியாமலே ஏற்படும் உணர்வு அது, அந்த ஈர்ப்பு இருபக்கமும் இருந்து அது புரிந்துணர்வு அதிகமாக காதலாக பரிணமிக்கின்றது. அதன் பின்பு இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம் என்பது எனது எண்ணம். இதில் மனமொத்த பின்பு திருமணம் எனும் சடங்கு அடையாளம் அவசியமில்லை என்றும் என்னை பிற்போக்கு வாதி என்றும் நீங்கள் சொல்லலாம். ஆனால் எனக்கு மனமொத்த பின்பும் அதை சட்ட ரீதியாக பதிவு திருமணம் செய்யவும் நமது தமிழர் கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்யவும் பிடித்திருக்கின்றது, அது தமிழ் கலாச்சாரமா இல்லையா என்று எனக்கு தெரியாது. இதில் இன்னொரு முக்கிய விடயமும் இருக்கு ..... நிச்சயமாக பெற்றோர்களுடன் பேசி அவர்கள் உணர்வுகளையும் மதித்து சம்மதிக்க வைக்க வேண்டும்.
மேலே நான் சொன்னது காதலித்து திருமணம் செய்வது குறித்து எனது எண்ணங்களை விருப்பத்தை, ஆனால் அப்படி செய்யவேண்டும் என்பதற்காகவே காதலிக்க முடியாதல்லவா. ஈர்ப்பு தானாக வந்து காதலாக பரிணமிக்கணும், அப்படி காதலாக பரிணமிக்கவில்லல காதல் உணர்வு வரவில்லை என்றால் பெற்றோர் உறவுகள் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து காதலிக்க வேண்டியதுதான். அப்போது சாதகம் பார்த்துதான் தெரிவு செய்யவேண்டும் என்பதல்ல, அவர்கள் தெரிவு செய்பவர்களுள் நமக்கு பிடித்தவரை பேசி விருப்பத்தத அறிந்த பின்பு திருமணம் செய்யலாம். அவ்வளவு தான் எனது கருத்து</span>
நிச்சயமாக ஈர்ப்பு என்பது இருக்கத்தான் வேண்டும் மதன். மற்றும்படி அதன்பின்னான சேர்ந்து வாழ்தல் என்பது அவரவர் எப்படி விருப்பம். ஆனால் அதேநேரத்தில் அர்த்தமில்லாதவற்றை அரங்கேற்றுவது முட்டாள்தனம் தர்னே. பதிவுத் திருமணம் சரி. மதரீதியான சடங்குகளூடான திருமணம் என்பது எதற்கு?
மற்றும்படி யாரந்த தேவதை யாரந்த தேவதை? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

