06-07-2005, 07:59 PM
மதநம்பிக்கை என்பதைவிட ஒவ்வொரு இனத்திற்கும் ஒருவகை கடவுள் நம்பிக்கை இருந்தது. தன்னை மீறிய சக்தியாக இயற்கையைப் பார்த்து பயப்பிட்ட மனிதன் அவற்றை வழிபடத் தொடங்கினான். வழிபாடுகள் வழக்கமாயின. வழக்கங்கள் மதக்கோட்பாடுகளாயின.
மற்றையது மேலே குறிப்பிட்டுள்ளதுபோல் இந்து மதம் என்று ஒன்று இருக்கவில்லை. அது பல மதங்களின் அல்லது பல கடவுள் நம்பிக்கைகளின் தொகுப்பு. இந்து என்கிற சொற்பதமே ஆங்கிலேயர் வருகைக்கு பிறகுதான் உண்டானது என்று கருதுகிறார்கள். இயற்கையை போன்று தனிமனித வழிபாடுகளும் தோன்றின. அவை கடவுள்களாகப் மாற்றம் பெற்றன. சாதனை செய்தவர்கள், தமக்காகப் போராடியவர்கள், தனித்துவமான சக்தியைக் கொண்டவர்கள் ஆகியோர் உயிரோடிக்கும் போதும், இறந்தபின்னும் வழிபடப்பட்டார்கள். வழிபாடுகளின் வடிவங்கள் இடத்துக்கு இடம் மாறுபட்டன. அவை வழக்கங்களாகப் பின்பற்றப்பட்டன.
கலாச்சாரங்கள் மொழி சார்ந்த கலாச்சாரமாகவோ, அல்லது மதம் சார் கலாச்சாரமாகவோ, அல்லது இனம்சார் கலாச்சாரமாகவோ வடிவம் பெறலாம். தமிழர் கலாச்சாரம் என்பது கொஞ்சம் சிக்கலான விடயம். அது இனம் சார்ந்ததா? மதம் சார்ந்ததா? என்பது சிக்கலான விடயம்.