06-07-2005, 07:05 PM
kuruvikal Wrote:எனக்கு எந்த தேவையுமில்லை குழப்பத்தை உண்டு பண்ணுவதற்க்கு உம்மைப்போல இன்ர நெற் ஆதாரத்தை மட்டும் கொண்டு எம்மை வளர்த்துக்கொள்ளவில்லை .வாசித்து அறிந்து கேட்டறிந்த விடயஙகளை கொண்டு வரமுடியாது.ஒன்று செய்யும் தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் திருமாவளவன் நெடுமாறன் போன்றோரிடம் தொட்பு கொண்டு கேட்டு பாரும் திராவிட கடவுள்கள்பற்றி--------------------------------முதலில் உமக்கு ஓன்று சொல்லிக்கொள்ள விரும்பிகிறன் உமது கள பொலிஸ்கார நினைப்பை விட்டுவிடும் எனது கருத்துரீதியான நடவடிக்கை எடுக்க மட்டுறத்தினர்கள் பொறுப்பாளர்கள் சொன்னால் கட்டுப்படுவேன் தமிழீழ தந்தை s.j.v செல்வா வின் இந்த மூன்று இனிசியலும் என்ன என்று தெரியுமா விதணடாவாதம் செய்யும் கத்துக்குட்டியான உமக்கு பதிலெழுதிபிரோயசனமில்லை யென்று நினைக்கிறேன்---------------------------------------------ஸ்ராலின்stalin Wrote:உண்மையில் திராவிடகடவுள்கள் விறுமாண்டி அண்ணண் மார் எல்லைகறுப்பன் அடுப்பு நாச்சிமார் போன்ற அது போல பிறவும் ஆகும். ஆரிய செல்வாக்குப்பின்னர் எல்லாம் மாறு பட்டது------ஸ்ராலின்
ஸ்ராலின்... சிங்களவர்கள் முருகன் தங்கள் கடவுள் என்று சமீபகாலமாகக் கூறிவருவது போல...சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மதம் சார்ப்பான குழப்பத்தை யாழ் கள வாசகர் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும் மதமாற்ற நோக்கம் கொண்டோரின் செயற்பாட்டுத் தொனியிலும் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து முன்வைக்கிறீர்கள்..!
மேலே நீங்கள் சொன்னதற்கு உங்களால் இயன்ற ஆதாரங்களைத் தரமுடியுமா...???! சும்மா கற்பனைகளையும் வக்கிரங்களையும் விதைத்து சக மனிதர்களை தப்பா பாதையில் வழிநடத்தாதீர்கள்...! உங்களை மேன்மையானவர் புரட்சிவாதி என்று காட்டிக் கொள்வதற்காக...!
அதேபோல் வாசகர்களும் தகுந்த சான்றுகளுடனான ஆதாரங்கள் இல்லாத கருத்துக்களை உள்வாங்க வேண்டாம்..அதை எவர் தரினும்...குருவிகள் தரினும் கூட....!
குறிப்பாக.. மதமாற்றம் நோக்கி மாணவ அனுமதி வழங்கிய சென் பற்றிக்ஸ் வழிவந்த கல்விக் கூடங்களையும் இதர கிறீஸ்தவ மதம் வழி வந்த பாடசாலைகளையும் தமிழர் சமூகத்துக்கு வழிகாட்டவில்லையா என்று சுட்டிக்காட்டிக் கேட்டதில் இருந்து உங்கள் கருத்துக்களின் உள் நோக்கம் குறித்து சந்தேகிக்க வேண்டிய நிலை இருக்கிறது...!
நாவலரை மையமாக வைத்து வந்த கருத்தில் அவர் ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரியை நாம் உதாரணம் காட்டினோம்...தேவை கருதி... உண்மையில் உங்களிடம் மதம் சார் நிலைப்பாடு இருந்திடாவிடில்... வேம்படி மகளிர் கல்லூரியை யாழ் மத்திய கல்லூரியை...யாழ் ஒஸ்மேனியா முஸ்லீம் கல்லூரியை நீங்கள் குறிப்பிட்ட பாடசாலைகளுடன் சேர்த்து... அவை தமிழர் சமூகத்தை முன்னேற்ற உதவவில்லையா என்று வினவியிருக்கலாம்...! ஆனால் நீங்கள் அப்படிச் செய்யாததும் நீங்கள்... இந்து மதத்தைத் தரக்குறைவாய் விமர்சனம் செய்து தமது வக்கிர ஆதிக்கத்தை நிலை நிறுத்தி சாதாரண இந்துக்களின் மனதைப் புண்படுத்த எண்ணும் ஆதிக்க சக்திகளுக்கு துணை போவதும் உங்கள் கருத்துக்களின் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது...!
அதனால் தயவுசெய்து உங்கள் மதம் இனம் மற்றும் கலாசாரம் பற்றிய கருத்துக்களுக்கு இயன்ற ஆதாரங்களை முன்வைத்து அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்குமாறு சக வாசகர்களாக நாம் எதிர்பார்க்கின்றோம்...!![]()

