06-07-2005, 06:38 PM
மார்க்கசின் மருமகன் மாவோவின் மச்சான் மாற்று கருத்து தோழர்களிற்கு கிடைத்த மாசற்ற மாணிக்கம் ஆயிரம் பகை வரினும் அஞ்சா நெஞ்சன். என்ன சாத்திரிக்கு ஏதும் மண்ழடை பிழையோ எண்டு யோசிக்காதையுங்கோ.ஒரு 7 மாதத்திற்கு முதல் கார்த்திகை 2004 பாரிசிலை உந்த மாற்று கருத்துகாரர் எண்டு கூறிக்கொண்டு திரிந்த ஒரு முக்கியமானவர் அகால மரணமடைந்து விட்டார் இந்த வசனமெல்லாம் இவரைபற்றி மாற்றுகருத்து தோளர்களின் இணைய தளங்களிலும் மற்றும் கனடாவிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையிலும்படிச்சதுபத்திரிகையிலும்படிச்சதுஇப்பிடியெல்லாம் அள்ளி விட்டு கொண்டிருந்தார்கள்.ஆனால் எவருமே இவரின் அவல வாழ்வை உண்மையான உள்மன குமுறலை எழுதவில்லை. நான் கொஞ்சம் எழுதலாமென நினைத்து இவரை பற்றிய மேலதிக விபரங்களிற்காய் பாரிசில் இவருடன் நீண்ட காலம் வேலை பார்த்த இவரைப்பற்றி நன்கு அறிந்த எனக்கு தெரிந்த ஒருவருடன் தொடர்பு கொண்டு எனது நோக்கத்தை சொல்லி விபரம் கேட்டேன். அதற்கு அந்த நண்பர்: சொன்னார் இறந்த மனிதனைபற்றி இனி எழுதுவது நாகரீகமல்ல என்று.ஒருமனிதன் வாழும் போது நாகரீகமாக வாழ்ந்துமறைந்திருந்தால் அவரைப்பற்றி அனாகரீகமாக எழுதுவது நாகரீகமல்ல.வாழும்போது தன்வயிற்றுபிழைப்பிற்காய் சொந்த இனத்தின் உழைப்பையே விற்று பிழைத்த மனிதனை பற்றி எழுதுவதில் எந்த தவறும் என்க்கு தெரியவில்லை.ஏனெனில் இறப்பு மட்டும் ஒரு மனிதனை புனிதனாக்கி விடுவதில்லை மரணத்தால் மட்டும் ஒருவன் மகாத்மாஆகிவிடுவதில்லை.அப்படிப்பார்த்தால் எம் வரலாற்றில் அல்பிரட் துரையப்பாமுதல் புளொட் மோகன்வரை புனிதர்களாகி விடுவார்கள்எம்மின வரலாற்றில் எப்படி தியாகமும் வீரமும் பேசப்பட்டு கொண்டிருக்குமோ அதே போல் துரோகமும் காட்டி கொடுப்பும் பேசபட்டு கொண்டேயிருக்கும்.அந்த துரோக வரிசையில் இவரும் இணைந்து கொள்கிறார். இவரைப்பற்றி எனது நண்பன் எழுதிய கடிதத்தை அப்படியே கீழே இணைத்து விடுகிறேன்
<img src='http://img162.echo.cx/img162/886/365616ak.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img162.echo.cx/img162/886/365616ak.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

