06-07-2005, 03:08 PM
ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா!
சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளாதாகவும் அவரது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயினும் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக தொடரந்தும் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பியை சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்து கடந்த தேர்தலில் போட்டியிட வைப்பதற்கும் இருகட்சிகளும் இணைந்து செயற்படவும் முன்னின்று செயற்பட்டவர் அமைச்சர் மங்கள சமரவீர என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஜனாதிபதிக்கும் ஜே.வி.பியினருக்கும் இடையில் ஏற்பட்ட உச்சக்கட்ட அரசியல் முறுகலில் ஜே.வி.பியின் பக்கம் நின்று ஜனாதிபதியிடம் பரிந்து பேசி வந்ததால் இவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
ஊடக அமைச்சர் என்ற வகையில் மங்கள சமரவீரவுக்கே தெரியப்படுத்தாமல் ஜனாதிபதி அண்மையில் ரூபவாகினியில் ஜே.வி.பியினரை தாக்கி வழங்கிய பேட்டிஇ ஜனாதிபதியின் கடந்த இந்திய விஜயத்தின் போது மங்களவை அழைத்துச் செல்லாதமை போன்றவை மங்களவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முறுகலை எடுத்துக்காட்டியிருந்தன.
பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மங்கள ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் ஜனாதிபதிக்கு எதிராக அமைச்சர்கள் அணியொன்று மங்கள தலைமையில் திரள்கிறது என்றும் கடந்த வாரம் தென்னிலங்கையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாத்தறை தொகுதி எம்.பியாக அரசியலில் புகுந்த அமைச்சர் மங்கள - ஒரு காலத்தில் எஸ்.பி.திஸநாயக்க இருந்தது போல் - ஜனாதிபதியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராகவும் விசுவாசியாகவும் இருந்து வந்தவர் ஆவார்
puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>