06-07-2005, 11:09 AM
kuruvikal Wrote:எமது தமிழ் சமூகம் 70% இந்து சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் பல நல்ல சமூகவியல் விடயங்களைத் தனதாக்கி ஆண்டாண்டுகளாக கட்டுக்கோப்போடு வாழ்ந்தது...! வாழ்ந்தும் வருகிறது...! அதற்குள் மதவாதத்தை சமூக வர்க்க வாதத்தை எவரும் அனுமதித்தத்தில்லை...! (இந்தியாவில் இருப்பது போன்று)
ஜனநாயகம் உட்பட விடுதலைப் போராளிகள் கூட மக்களின் மதக் கோட்பாடுகளைக் கைவிடச் சொல்லவில்லை...அதற்கான மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை...! அவையும் கூட தமிழர் சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சமூகவியல் பண்பு என்றே கண்டார்கள்..! இப்போ பார்பர்ணிய எதிர்ப்பு என்ற போர்வையில் மக்களிடையே மதம் தொடர்பான தவறான சிந்தனைகளைப் பரப்பி அவர்களை தவறான நடத்தைகளின் பால் இட்டுச் சென்று சமூகச் சீரழிவை ஊக்கிவிக்க சிலர் முனைகின்றனர்...! :
மதங்கள் உலகில் சில குறிப்பிட்ட பாகங்களில் தோன்றி உலகம் முழுவதும் பரவின. கிறிஸ்துவ மதம் இசுலாமிய மதம் போல மத்திய கிழக்கில் தோன்றி உலகெங்கும் பரவியது. இந்து மதம் இந்தியாவில் பல பாகங்களிலும் தோன்றிய பல மதங்களின் தொகுப்பாகும். அதில் வடஇந்தியாவில் சமஸ்கிருதத்தோடு தோன்றிய இருக்கு வேதங்களின் படி அமைந்த மதங்களின் பங்கு கணிசமானது. ஆனால் தமிழரின் பூர்வீக மதங்களையும் இந்து மதம் உள்ளடக்கி இருக்கிறது.
இந்து மதம் போற்றத்தக்களவு நற்பண்புகளை ஊட்டி வளர்க்கிறது. குறைகளை பார்த்து நிவர்த்தி செய்ய வேண்டிய அதே வேளை நிறைகளை பார்த்து அவற்றை நாம் ஊக்குவிக்கவும் வேண்டும்.
மதங்கள் பிற்போக்கானவை. எல்லா மதங்களும் அப்படித்தான். மதங்களை முற்றாக அழித்து வெற்றி கண்ட நாடுகள் இருக்கின்றன. சீனா போன்ற நாடுகளின் இளைய தலைமுறையினர் மதங்களும் கடவுள் நம்பிக்கையும் இன்றி சிறப்பான ஆரோக்கியமான வாழ்வு வாழ்கிறார்கள்.
மதங்கள் மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழியாகும். தொலைக்காட்சியில் பைபிள் போதித்து கோடீஸ்வரரானவர்கள் இதற்கு உதாரணம்.
மதங்களை வைத்து மக்களை ஏமாற்றுவதற்கு தடை விதித்து அதே வேளை மக்களின் சிறந்த வாழ்ககைக்கு மதங்கள் காட்டும் வழிகளை பின்பற்றுவது சிறப்பாக அமையும்.
புத்தமதம் சொல்லித்தரும் பற்றில்லாமல் வாழும் வழியையும் இந்து மதம் சொல்லித்தரும் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழும் வழிகளையும் இசுலாம் காட்டும் ஒற்றுமையையும் கிறிஸ்தவம் சொல்லும் படி மற்றவரை நேசித்து வாழும் வழிகளையும் மக்கள் பின்பற்றி சிறப்புடன் வாழலாம். எத்தனையோ பக்தர்கள் இப்படி சிறப்பான வாழ்வு வாழ்கிறார்கள்.
ஆண் - பெண் உறவு என்று வரும்போது இந்து மதம் காட்டும் முழுமையான வாழ்வை வேறு எந்த மதமும் காட்டுவதில்லை.

