06-07-2005, 09:24 AM
Mathan Wrote:லொள்ளு பண்ணாதீங்க நான் கேட்டது உங்களுக்கு புரியலையா? இதில் எது என்று கேட்டேன்,
1) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்
2) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்
ஈர்ப்பு > நட்போடு பழகல் > நட்பில் புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து வாழ்தல் > நேசித்தல் (காதலித்தல்) எனக்குப் போதுமானதாக நான் கருதுகிறேன். திருமணம் என்பது எனக்கு அவசியம் அற்றதாகப் படுகிறது (அதாவது இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள்).
ஆனால் மதன் நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? திருமணம் செய்தல் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா? அதுவும் சேர்ந்து வாழ்தல் தானே? அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் சட்டங்கள் என்பன அதற்கான அனுமதியாக அமைகின்றன.
காதல் திருமணம்= தானே தன் துணையைத் தேர்ந்தெடுப்பது. (ஏனென்றால் காதலைக் கூட தன்பாட்டுக்கு யாரும் வரவிடுவதில்லை, வலுக்கட்டாயமாக நீ என்னைக் காதலி நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பது தான் இன்று அதிகம் நடக்கிறது)
பேசிச் செய்தல் = பெற்றோரால் (உறவுகளால்) தேர்ந்தெடுக்கப்பட்டு (அதன் பின் பிடித்திருந்தால்) மணமுடித்தல்.
சரி பிறகு வந்து மிகுதியை எழுதுகிறேன். சரியா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

