06-07-2005, 03:09 AM
stalin Wrote:kuruvikal Wrote:உலகில் எந்த மனிதனுக்கும் மற்றவனைப் பாதிக்காத நம்பிக்கையின் அடிப்படையில் வாழ உரிமை உண்டு...! இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளை அடிப்படையாக நம்பி வாழ்ந்து தமிழுக்கும் மேற்குலக மத ஆதிக்கங்களுக்கும் எதிராகப் பணியாற்றிய நாவலர் போன்ற அருமக்கள் வாழ்ந்த தேசத்தில் இருந்து வந்த தமிழையே கொச்சைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட தரக் குறைவான வக்கிர சிந்தனையிலான விசமத்தனமான ஒரு குறிப்பிட்ட சமூக எதிர்ப்புக் கருத்தை இக்களம் தாங்கி வருவது கவலைக்கிடமான விடயம்...! மூடநம்பிக்கை என்பதை தெளிவுபடுத்த இதுவல்ல முறை அதற்குக் கூட நாகரிக வடிவம் ஒன்று இருக்கிறது என்பதை அறியாத பலர் தங்கள் காழ்புணர்ச்சியின் வெளிபாடாக சக மனிதனின் நம்பிக்கையை வக்கிரப் பார்வையின் மூலம் சித்தரித்துச் சீரழித்து இன்புறும் புத்தி பேதலித்த இவர்களால் நிச்சயம் எந்தச் சமூகமும் விளிப்புணர்வோ விடுதலையோ உய்வோ அடையப் போவதில்லை...! மற்றவனின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதன் போலித்தனத்தை அவனுக்கு செய்மையாகச் செப்ப இயலாத இவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே அல்ல..சமூகச் சீரழிவாளர்கள் என்பதை வெகுவிரைவில் சமூகம் உணரும்...இதன் பாதிப்புக்கள் எல்லை மீறியதாகும் போது அனைத்து சமூகக் கட்டமைப்புக்களும் சிதறிச் சின்னாபின்னாமாகும்...அப்போது இக்களத்தின் தேவை கூட இங்கிராது....! :wink: <!--emo&குருவிகள் இந்துசமயம் திராவிடரின் சமயமில்லையென்று தெரியாதுபோலை மற்றது குருவி போற்றும் நாவலர் இந்த சாதி அமைப்பை நிலைநிறுத்தப் பாடுபட்டார் என்பதை மறக்க கூடாது-----ஸ்ராலின்--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதே நாவலன் தந்த கல்விக் கூடமாம் யாழ் இந்துவில் எந்தச் சாதிப்பிரிவினையும் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்று இன்று உலகெங்கும் சிறப்புடன் வாழ்கிறார்கள்..அவன் தந்த தமிழின் அடிப்படையில்தான் நீங்கள் தமிழர்கள் என்று உச்சரித்து இங்கு கருத்தாடிக் கொண்டிருக்கிறீர்கள்... வக்கிரங்களை எழுதி வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்..! என்பதையும் மறந்திடாதீர்கள்..! காசுக்கும் பதவிக்கும் மதமாற்றம் செய்த கிறிஸ்தவ இஸ்லாமிய மத ஆதிக்கங்களுக்குள் ஆங்கில மொழியாதிக்கத்துக்குள் இருந்து சமூகத்தையும் தமிழையும் அமைதிப் புரட்சி மூலம் மீட்டவன் நாவலன்...! புரிந்து கொள்ளுங்கள்...! நீங்கள் தமிழர் என்று இன்று உச்சரிக்கக் காரணமானவன்...சைவத்தின் கோட்பாட்டைத் தாங்கிய அன்றைய நாவலனே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->