06-06-2005, 10:37 PM
இங்கே பெண்நிலையில் அவர் ஊரில் இருக்கும் போதே இன்னொருவரை காதலித்தவராயின் அங்கேயே அவரைத் திருமணம் முடித்து விடயத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் புலம் வந்து தன் காதலைனையும் கணவனின் செலவில் அழைத்து பிரிந்து சென்றது சுயநலப்போக்கே. அதேநேரம் இதிலே தனியே பெண் மட்டும் சம்பந்தப்படவில்லை காதலனாக உள்ள ஆணும் சம்பந்தப்படுகிறார். எனவே அவர்கள் இருவர் மீதும் குறைகூறுவதை விடுத்து இங்கே கணவனின் சிந்தனைப் போக்கை மட்டும் பார்க்கும் போது யதார்த்த நிலையை உணர்ந்தவனாகவும், பகுது்தறிவோடு சிந்திக்கத்தெரிந்தவனாகவும் நல்ல முடிவை ஆரம்பத்தில் எடுத்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை எடுத்தது கொஞ்சம் முரண்பாடாகத்தான் உள்ளது.
அண்மையில் ஒரு தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். திரைப்படத்தின் பெயர் "அமுதே". முடிந்தால் பாருங்கள். குடும்ப சூழ்நிலையால் காதலைர்கள் இருவரும் பிரிந்து வேறு வேறு துணையை மணமுடிக்கிறார்கள். மணமுடித்தபின் விடயத்தை தம் துணைகளுக்கு சொல்கிறார்கள். விவாகரத்து பெறப்போவதாகவும் அறிவிக்கிறார்கள். இப்படிச் செல்கிறது கதை. மனித உறவுகளின் நிலைப்பாட்டையும், மனித மனங்களின் மாற்றங்களையும் சொல்கின்றது.