06-06-2005, 06:14 AM
செய்தி: மட். அரசியல்துறை பணிமனை மீதான தேடுதல் போராளிகளை இம்சைப்படுத்தும் செயலாகும். நிருவாகப் பொறுப்பாளர் தங்கையா தெரிவிப்பு
(நமது நிருபர்)
மட்டக்களப்பு தாமரைக் கேணி அரசியல்துறைப் பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையானது போராளிகளை இம்சைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே கருதுகிறோம். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ நிருவா கத்துறைப் பொறுப்பாளர் தங்கையா தெரிவித்தார்.
சனிக்கிழமை இரவு சிறிலங்காப் படையினர் மற்றும் பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- சனிக் கிழமை இரவு பதினொரு மணியளவில் எமது அலுவலக கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது சுமார் முப்பது ஆயுதம் தரித்த படையினர் நின்றனர். வீதியில் கவச வாகனங்களில் நூற்றுக்குமேற்பட்ட படையினர் காணப்பட்டனர்.
உடனடியாக சமாதானச் செயலகம், அரசியல்துறைச் செயலகத்துக்கு தெரிவித்தோம்.
அப்போது படையினர் அலுவலகத்தை சோதனையிட வேண்டும் எனத் தெரிவித்த போது போராளிகள் மறுத்துவிட்டனர். பொலிசாரே சோதனையிட வேண்டும். அதேநேரம் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் முன்னிலையில் தான் இவை நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தோம்.
இதன் பின்னர் கண்காணிப்புக்குழு பிரதிநிதி அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டதுடன் நான்கு பொலிசார் ஆயுதங்களின்றி சோதனைசெய்ததாகத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது அதிகளவிலான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் காணப்பட்டதுடன் ராசிக்குழு உறுப்பினர்களும் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின் பின்னணியை நோக்குமிடத்து போராளிகளை இனங்காண்பது அலுவலகத்தின் அமைப்பை இனம் காண்பது போன்ற நோக்கமாகும் எனவும் கூறினார்.