06-05-2005, 11:02 AM
kuruvikal Wrote:Quote:படுகொலைகளுக்கு
பதில் சொல்ல - தலைவன்
படையில் இணைந்தவன் தான்
தியாகி.பொன்.சிவகுமாரன்
இந்தக் கருத்துச் சரியா கவிதன்...??! அண்மையில் தலைவர் பிரபாகரனுடைய வரலாறு சொல்லும் ஒளிவீச்சைப் பார்த்த போது அவர் சிவகுமாரனைப் பற்றியும் சொல்லி இருந்தார்... அவர்கள் புலிகளோடன்றி தனித்தே இயங்கியதாகவும் அவர்களின் போராட்ட முன்னெடுப்பு மாணவ சமூகத்தை மையமாகக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்கும் அவர்களுக்குமிடையே தொடர்புகள் இருந்திருப்பினும் பாதைகள் வெவ்வேறக இருந்தன என்றும் குறிப்பிட்டிருந்தார்...எனினும் இலட்சியத்தால் ஒருமித்தவர்களாக இருந்துள்ளனர்...!
நன்றி கவிதன் மற்றும் நிதர்சன்...காலத்தால் அழியாத காவிய நாயகர்களை நினைவலைகளால் பூஜித்ததற்கு...!
இன்றும் எம்மத்தியில் வெளிப்படையாக புலி ஆதாரவு என்று கொண்டு மனதுக்குள் போராட்டதின் தார்ப்பரியம் தேவை உணராதவர்களாக பலர் இருக்கின்றனர்...குறிப்பாக தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்....! அவர்களுக்கு அவர்களின் நிலைப்பாடுகளின் தவறை இப்படியான நினைவலைகள் உணர்விருந்தால் உணர வைக்கும்...! மனது மரத்ததுகளுக்கு எதுவும் செய்யமுடியாது...!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி குருவிகளே.. நான் தவறான பொருள் பட எழுதிவிட்டேன். எனக்கும் 100% இப்படி தான் என தெரியாது . நான் நினைத்தேன் இவரும் தலைவருடன் இணைந்து செயற்பட்டவர் என்று தான் ஆனால் முதல் போராளி சங்கர் என்னும் போது இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக கருதப்படவில்லை . தியாகியாக .. கருத்தப்பட்டே அவரின் நினைவு தினத்துக்கு அடுத்த நாளை மாணவர் எழிச்சிநாளாக பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் இவரும் தலைவரின் வழி வந்தவர் என்பதால் உங்கள் கருத்தை ஏற்று கவிதையில் சிறுமாற்றம் செய்துள்ளேன்.
நன்றி
[b][size=18]


