06-04-2005, 12:01 AM
வவுனியாவில் தாக்கப்பட்டது தமது ஒலிபரப்பு நிலையம் அல்ல என்று சன் தொலைக்காட்சி கூறுகிறது
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/06/20050602152328suntvattack.jpg' border='0' alt='user posted image'>
<b>வவுனியாவில் தாக்குதலுக்கு உள்ளான மறு ஒளிபரப்பு நிலையம்</b>
இலங்கையில் வவுனியாவில் நேற்று குண்டு வீசித் தாக்கப்பட்ட மறு ஒலிபரப்பு நிறுவனம் தங்களுக்கு சொந்தமானது அல்ல என்று சென்னையில் இருந்து இயங்கும் சன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள சன் தொலைக்காட்சியின் மீள் ஒளிபரப்பு நிலையத்தின் மீது நேற்று இரவு 1.45 மணியளவில் இனந்தெரியாதவர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் அந்த நிலையம் சேதமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் அந்த நிறுவனத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும், இலங்கையில் தமக்கு மறுஒளிபரப்பு நிலையமோ, ஒளிபரப்புக்க் கூடமோ அல்லது கிளை நிறுவனமோ எதுவும் கிடையாது என்று சன் தொலைக்காட்சி நிறுவனம் இன்று சென்னையில் அறிவித்துள்ளது.
அதேவேளை சன் நிறுவனம் இலங்கையில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் வவுனியாவில் தாக்குதலுக்கு உள்ளான மறு ஒளிபரப்பு நிலையத்துக்கும் சென்னை சன் நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் தகவலறிந்த வட்டாரங்களும் கூறுகின்றன.
பிபிசி தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>