06-02-2005, 12:57 PM
ஓமந்தையில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்த்தனர்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/05/20050531152858vavuniabudha203a.jpg' border='0' alt='user posted image'>
சர்ச்சைக்குரிய ஓமந்தைப் புத்தர் சிலை
வவுனியா ஓமந்தை பிள்ளையார் கோவில் காணியில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக எழுந்துள்ள நிலைமையை நேரில் கண்டறிவதற்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அங்கு விஜயம் செய்து பொதுமக்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக அந்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.
ஆலயக் காணியின் உறுதிப்பத்திரத்தைத் தரவேண்டும் என்று படையினர் ஆலய குருக்களிடம் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் அவர் ஊரைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று விட்டதாகவும் ஓமந்தைவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு பரம்பரைகளாக அந்த ஆலயத்தைப் பராமரித்து, பூஜை வழிபாடுகளை நடத்தி வந்த குடும்பத்தைச் சேர்ந்த குருக்களே அச்சம் காரணமாக ஊரைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக் கோவில் காணியில் புத்தர் சிலையை நிறுவியதுடன், இங்கு புராதன பௌத்த ஆலயம் இருந்ததாகக் காட்டும் வகையில் அறிவித்தல் பலகை ஒன்றை படையினர் வைத்துள்ளதாகவும் ஊர்வாசிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
புத்தர் சிலையை வைத்திருப்பதன் காரணமாக தமது வழிபாடுகளை உரிய முறையில் செய்ய முடியாமல் இருப்பதுடன், அங்குள்ள மக்கள் மத்தியில் அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று வந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையக அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த இராணுவ அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளின் கருத்தை உடனடியாக அறிய முடியவில்லை.
இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ஞானம் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
இதற்கிடையில் யாழ். சாவகச்சேரி கச்சாய் பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரு சிறுமி உட்பட மூவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைவிடப்பட்டிருந்த கிணறு ஒன்றைத் துப்புரவு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருளைப் பரீட்சித்துப் பார்த்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்; 22 வயதுடைய கந்தசாமி காண்டீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்; யாழ் மாவட்ட பதில் நீதவான் எம்.திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன், இறந்தவரின் உடலை மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேல் விசாரணைகளை பொலிசார் நடத்தி வருகின்றனர்.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>